போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஆசிரியர்கள் ,teachers, சென்னை உயர் நீதிமன்றம் , Chennai High Court, வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் ,Advocate AP Suryaprakasam, ஜாக்டோ - ஜியோ , Jacto Geo, நீதிபதி கிருபாகரன், Justice Kripakaran, மாணவி அனிதா,Student Anitha,  எஸ்மா,Esma, டெஸ்மா,Tesma, மெமோ,Memo,  ஐகோர்ட்,High Court, சென்னை,Chennai,

சென்னை:போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆசிரியர்கள் ,teachers, சென்னை உயர் நீதிமன்றம் , Chennai High Court, வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் ,Advocate AP Suryaprakasam, ஜாக்டோ - ஜியோ , Jacto Geo, நீதிபதி கிருபாகரன், Justice Kripakaran, மாணவி அனிதா,Student Anitha,  எஸ்மா,Esma, டெஸ்மா,Tesma, மெமோ,Memo,  ஐகோர்ட்,High Court, சென்னை,Chennai,

போராட்டத்தால், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், ஆசிரியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்து, இழப்பீடு வழங்க வேண்டியது வரும் என்றும், அதற்கு நிவாரணம் கேட்டு, நீதிமன்றத்திற்கு வர முடியாது என்றும் கண்டித்துள்ளது. மேலும், போராட்டம் தொடர்பாக, 12 கேள்விகள் எழுப்பி, அதற்கு விளக்கம் தரவும், அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர், ஏ.பி.சூரியபிரகாசம் தாக்கல் செய்த மனுவில், 'மாணவி அனிதாவின் மரணம், பள்ளி செல்லும் இளைய சமூகத்தினர் மனதில், பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. 'சவால்களை எதிர்கொள்ளும் வகையில், மாணவர்களை தயார்படுத்த வேண்டும். அவர்களுக்கு, உளவியல் ஆலோசனைகளை வழங்க, நிபுணர் குழுவை அமைக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

இம்மனு, நீதிபதி கிருபாகரன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், தற் போது ஆசிரியர்கள் போராட் டத்தில் ஈடுபட்டு வருவது பற்றி தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதி கூறியதாவது:

மருத்துவ சேர்க்கைக்கான, 'நீட்' தேர்வில், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள், குறைவான மதிப்பெண் பெற்றதற்கு, ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதும் ஒரு காரணம். மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களில், சில பேருக்கு மட்டுமே, மருத்துவ படிப்பில் இடம் கிடைத்துள்ளது. போராடும் ஆசிரியர்கள், இதற்கு வெட்கப்பட வேண்டும்; அவர்களுக்கு, பொறுப்பு உணர்வு வேண்டும்.நீதிமன்ற உத்தரவை, ஆசிரியர்கள்

பின்பற்றவில்லை என்றால், அவர்கள் வழக்கு தொடர முடியாதபடி, உத்தரவு பிறப்பிக்க நேரிடும். போராட்டத்தால், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், ஆசிரியர்களின் சம்பளத்தில் இருந்து, இழப்பீடு வழங்க வேண்டியது வரும்.அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் ஆசிரியர்கள் நிறைய பேர் உள்ளனர்.

சங்க தலைவர்கள், தாங்கள் தான் உயர்ந்தவர்கள் போல செயல்படுகின்றனர். அவர்கள் என்ன, அரசிய லமைப்பு சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களா; ஆசிரியர்கள், என்ன தொழிலாளிகளா; போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது; அதுகுறித்து, அரசு அறிக்கை அளிக்க வேண்டும்.இவ்வாறு கூறிய நீதிபதி, விசாரணையை, வரும், ௧௮ம் தேதிக்குதள்ளிவைத்தார்.

இதற்கிடையில், 'பெரும்பாலான அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் பணிக்கு வருவது இல்லை. அதனால், ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து, அரசுக்கு அனுப்பிய மனுவை பரிசீலிக்க வேண்டும்' எனக்கோரி, மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இம்மனுவையும் விசாரித்த, நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சிறுவேலியநல்லுாரில் உள்ள, பஞ்சாயத்து ஒன்றிய நடுநிலை பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் காளிதாஸ், பள்ளிக்கு தொடர்ந்து வராததால், பள்ளியை கிராமத்தினர் மூடியுள்ளனர். தள்ளாடிய நிலையில், பள்ளிக்கு தலைமை ஆசிரியர் வந்துள்ளார்.தற்போது, அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பெரும்பாலான அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் பணிக்கு வருவது இல்லை; முறையாக கற்பிப்பதில்லை என்ற, புகார்கள் உள்ளன.

அதேநேரத்தில், அரசு பள்ளிகளில், அர்ப்பணிப்பு உணர்வுடன், நேர்மையாக பணியாற்றும் ஆசிரியர்களும் உள்ளனர். அவர்களின் பங்களிப்பு, பாராட்டுக்குரியது; அவர்களை குறைத்து மதிப்பிட முடியாது. இந்த

Advertisement

நீதிமன்றத்தை பொறுத்தவரை, தவறு செய்யும் ஆசிரியர்கள் பற்றியே கவலை கொள்கிறது. அரசு பள்ளிகளில், இப்படி நிலைமை இருக்கும் போது, ஆசிரியர்களில் ஒரு பகுதியினர், பணியை புறக்கணிக்கின்றனர். அதனால், ஏழை மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.

எனவே,கீழ்கண்ட தகவலை அதிகாரிகள் அளிக்கவேண்டும்.

*பள்ளிக்கு செல்லாமல், எத்தனை ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன?
* எவ்வளவு ஆசிரியர்கள், பணிக்கு வராமல் உள்ளனர்?
* ஆசிரியர் சங்கங்களில், ஓய்வு பெற்ற ஆசிரியர்களும், நிர்வாகிகளாக பணியாற்றுகின்றனரா?
* தனியார் பள்ளி ஆசிரியர்களும், போராட்டத்தில் பங்கேற்கின்றனரா அல்லது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் ஒரு பிரிவினர் மட்டும், போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனரா?
* அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
* தமிழக மக்கள் தொகையில், ஆசிரியர் விகிதாச்சாரம் எவ்வளவு?
* ஆசிரியர்களின் குறைந்தபட்ச, அதிகபட்ச சம்பளம் எவ்வளவு?
* அதற்கு, அரசு பணம் எவ்வளவு செலவிட படுகிறது; அரசின் மொத்த பட்ஜெட்டில், எத்தனை சதவீதம்?
* வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் சதவீதம் என்ன; அவர்களின் சராசரி மாத, ஆண்டு வருமானம் என்ன?
* தனியார் பள்ளி ஆசிரியர்களை விட, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, குறைவான சம்பளம் வழங்கப்படுகிறதா?
* போராட்டத்தினால், எத்தனை பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளன?
* பணி புறக்கணிப்பை தடுக்க, அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.இந்த மனு மீதான விசாரணை, இன்று தொடர்கிறது.

'மெமோ'வுக்கு விளக்கம் தர வேண்டாம்


நீதிமன்ற தடை, அரசு எச்சரிக்கையையும் மீறி, ஜாக்டோ - ஜியோ போராட்டம் தீவிரமாகி உள்ளது. அதனால், 'எஸ்மா, டெஸ்மா' சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்து, அரசு ஆலோசித்து வருகிறது. முதற்கட்டமாக, அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு, தனித்தனியாக துறை அலுவலகம் மூலம், விளக்கம் கேட்டு, 'மெமோ' கொடுக்கப்படுகிறது.

இது குறித்து, ஆசிரியர்கள் கூறுகையில், 'மெமோ அல்லது நோட்டீசை, ஆசிரியர்கள் யாரும் கையெழுத்திட்டு வாங்க வேண்டாம்; விளக்கமும் தர வேண்டாம். அதன் மீதான நடவடிக்கைகளை, நாங்கள் கவனித்து கொள்வோம் என, சங்கங்கள் அறிவித்துள்ளன' என்றனர்.


Advertisement

வாசகர் கருத்து (53)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Arulmurugan - Pallipalayam,இந்தியா
14-செப்-201714:53:55 IST Report Abuse

Arulmuruganஇந்த போராட்டம் ஆசிரியர்களுக்கு மட்டும் இல்லை அனைத்து அரசு ஊழியர்களுக்கும் துப்புரவு பணியாளர் முதல் தலைமை செயலாளர் வரை அனைவருக்கும் பொருந்தும் அதனால ஆசிரியர் குறை கூற வேண்டாம்

Rate this:
Arulmurugan - Pallipalayam,இந்தியா
14-செப்-201714:46:50 IST Report Abuse

Arulmuruganஐந்து வருஷம் எம் எல் ஏ வாக இருந்தால் வாழநாள்பூரா ஓய்வூதியம் பெறும் இவர்கள் வாழ்நாள் பூராவும் வேலை செய்யும் ஊழியர்களுக்கு ஏன் ஓய்வூதியம் வழங்கக் கூடாது?. ஏழாவது ஊதிய கமிஷன் சிபாரிசை ஏற்காததது ஏன் ஆக்கபூர்வமான நீதி இல்லை..அவர்களை போராட்டம் வரை செல்ல வைத்தது யார்? இதை ஏன் ஆரம்ப நிலையிலேயே தடுக்க வில்லை....

Rate this:
Rathakrishnan - anganur ,இந்தியா
14-செப்-201714:08:20 IST Report Abuse

Rathakrishnanஜக்கடோ ஜியோ உங்கள் பிள்ளைகளை எப்போது அரசு பள்ளியில் சேர்ப்பீர்கள்???.

Rate this:
மேலும் 50 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)