கருணாநிதி போட்ட பிச்சையா : தமிழிசை ஆவேசம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி போட்ட பிச்சையா : தமிழிசை ஆவேசம்

Added : செப் 13, 2017 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கருணாநிதி போட்ட பிச்சையா  : தமிழிசை ஆவேசம்

சென்னை: ''நான் மருத்துவம் படித்தது, கருணாநிதி போட்ட பிச்சை என, ஸ்டாலின் கூறியிருப்பது தவறு,'' என, பா.ஜ., மாநில தலைவர், தமிழிசை தெரிவித்துள்ளார்.

மருத்துவ சேர்க்கைக்கான, 'நீட்' நுழைவுத்தேர்வு தொடர்பாக, தமிழகத்தில், பா.ஜ.,வுக்கும், எதிர் கட்சிகளுக்குமிடையே, வார்த்தை மோதல் வெடித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, 'தமிழிசை மருத்துவ படிப்பில் சேர்ந்தது, கருணாநிதி போட்ட பிச்சை' என, ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து, தமிழிசை நேற்று, சென்னையில் அளித்த பேட்டி: நான் மருத்துவ படிப்பில் சேர்ந்தபோது, எம்.ஜி.ஆர்., தான் முதல்வராக இருந்தார். அப்போது, நேர்முக தேர்வு மட்டுமே அமலில் இருந்தது. நான் எந்த தேர்விலும், 'அரியர்ஸ்' வைக்காத, மாணவியாக இருந்தவள்; வெளிநாடுகளிலும், தகுதியோடு தான் படித்தேன்.நான், மருத்துவ படிப்பில் சேரும்போது, கருணாநிதி, பதவியில் இல்லை. அதனால், இதை கொச்சைப்படுத்த வேண்டாம். இதுகுறித்து, ஸ்டாலின் கூறியது நாகரிகமற்ற வார்த்தை. 'தமிழ், தமிழ்...' என முழங்கும், தி.மு.க., பிரமுகர்களின், வீட்டு குழந்தைகளில் எத்தனை பேர், தமிழ் படிக்கின்றனர் என, கூற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
14-செப்-201710:18:52 IST Report Abuse
Cheran Perumal ஆர் எஸ் பாரதி பேசியதை நானும் கேட்டேன். மிகவும் கண்ணியமற்ற பேச்சு. இவர்களுடைய பதவியே மக்கள் போட்ட பிச்சைதான். இனி ஸ்டாலின் தேர்தலின்போது ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று உங்கள் மகனோ, மகளோ படிப்பது நாங்கள் போட்ட பிச்சை என்று சொல்லி ஓட்டு கேட்பார்.
Rate this:
Share this comment
Cancel
Kalyani S - Ranipet,இந்தியா
14-செப்-201708:57:41 IST Report Abuse
Kalyani S "அப்போது, நேர்முக தேர்வு மட்டுமே அமலில் இருந்தது"................... அப்படின்னா NEET இருந்திருந்தால் இன்று நீங்கள் சாதா தமிழிசை.
Rate this:
Share this comment
Cancel
srisubram - Chrompet,இந்தியா
14-செப்-201708:18:13 IST Report Abuse
srisubram திரு ஸ்டாலின் அவர்களின் நாகரிகமற்ற பேச்சு . ஒன்று கருணாநிதி அவர்கள் உபகாரசம்பளம் , அல்லது கல்வி செலவு அவர்தம் சொந்த செலவில் செய்திருந்தால் (கட்சி நிதி தவிர்த்து ) கூட இவ்வாறு பேசியது மிக தவறு .அவர் அவ்வாறு உபகார சம்பளமோ , அல்லது கல்வி காண செலவோ செய்யவில்லை என்று அறிகிறேன் ..
Rate this:
Share this comment
Cancel
Laxmanan Mohandoss - ambur,இந்தியா
14-செப்-201708:01:58 IST Report Abuse
Laxmanan Mohandoss Stalin speaks too much now,he imagines as future CM,he must control his tongue
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
14-செப்-201707:24:09 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> அம்மா தமிழசை வாழ்த்துக்கள் நீங்கள் ரேங்க் ஹோல்டர் என்று சொல்லி கேட்டிருக்கேன் ,படிப்பே ஏறாதவா எல்லாம் தான் இந்தமாதிரி தையாதைக்காணு குதிச்சு கலாட்டா செயறவங்க என்றும் தெரியும் முகவன் வமிசத்துலே கல்லுக்குறி போஸ்ட் கிரேஜுவேட் கனிமொழிமட்டும் தான் என்று சொல்லுவாங்க முத்து நடிகன் அவர் பிள்ளை டாக்டராம் , சட்டையின் அழகிரி எல்லாம் பட்டதாரிகள் இந்துக்களின் வாரிசுகளும் எவனும் டாக்டரே இல்லீங்க அதுவம் தெரியும் அரைகுறை படிப்பெல்லாம் இப்படியே தான் ஆட்டம் போடுங்கோ
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
14-செப்-201707:19:09 IST Report Abuse
தேச நேசன் கருணா ஒரு இரட்டைவேட சந்தர்ப்ப வாதி ஒரு காலத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளை எதிர்த்தார் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியை அரசுடைமையாக்கி பழிவாங்கினார் ஆனால் இன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பெரும்பகுதி அவரது கட்சிக்கு காரர்களுடையது. (இப்போது சிகிச்சைக்குக்கூட போரூருக்குப் போகிறார் இதுதான் அவர்களது பச்சோந்திக் கொள்கை
Rate this:
Share this comment
Cancel
14-செப்-201706:43:20 IST Report Abuse
vandemataram அப்படியே இருக்கட்டுமே! பிச்சைக்காரன் புதிரும் கற்கை நன்றே! நீட் தேர்வு இல்லாதது அன்றைய குறை. இருந்திருந்தால் எந்த நிதியும் கருணையோடு பிச்சை போட்டிருக்க வேண்டாம். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற எவரும் எவருடைய தயவும் பெற வேண்டிய இடத்தில் இருக்க மாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
14-செப்-201706:05:49 IST Report Abuse
Matt P Chutlai....தன் தந்தை தன் அரசியல் நண்பரின் மகளுக்காக அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி மருத்துவ படிப்புக்கான இடத்தை வழங்கினார் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார் ....முறைகேடுகளுக்கும் திமுகவுக்கும் இடைவெளி இல்லை என்பதை மக்கள் அறிந்ததே ...க்ரிஷ்ணசாமியின் மகlukku, சம்பத்தின் makalukku ..ஜெயா மருத்துவப்படிப்பு அனுமதி என்ற பிச்சைபோட்டார் என்றும் சொல்கிறார்கள் .ஏற்கெனவே இருக்கின்ற நுழைவு தேர்வே தன பிள்ளைகளுக்கு கடினம் என்று நினைக்கின்ற அரசியல்வாதிகள் ,நீட் தேர்வை எதிர்ப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை ...சுடலை ..தான் ஒரு கீழ்த்தரமான அரசியலலவாதி என்பதை தான் பேசும் பேச்சுக்களில் காட்டி வருகிறார்
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
14-செப்-201705:47:25 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே இதுல என்ன ஜோக்குன்னா, கல்லூரியில் சேர்த்தாலும் பாஸ் பண்ண முடியாம திணறிய சுடாலின் தான் இன்று உங்களை கேலி பண்ணுவது தான்
Rate this:
Share this comment
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
14-செப்-201704:47:57 IST Report Abuse
Amirthalingam Sinniah ஆங்கில பாடசாலைகள் இல்லாவிடில் , அவர்களின். மூளை இயங்காது. ஊருக்குத்தான் உபதேசம், தனக்கல்லடி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை