நீர்வழிச்சாலை திட்டத்தால் 1 கோடி பேருக்கு வேலை : ஏ.சி.காமராஜ் தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நீர்வழிச்சாலை திட்டத்தால் 1 கோடி பேருக்கு வேலை : ஏ.சி.காமராஜ் தகவல்

Added : செப் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

திண்டுக்கல்: ''நவீன நீர்வழிச்சாலை திட்டத்தால், ஒரு கோடி பேருக்கு வேலை கிடைக்கும்'', என அத்திட்டத்தின் தலைவர் ஏ.சி.காமராஜ் தெரிவித்தார்.

திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி யில் 'ஸ்குவாட்ரா- 2017' எனும் தேசிய தொழில்நுட்ப போட்டிகள்நடந்தன. அதில் பங்கேற்ற அவர் பேசியதாவது: நவீன நீர்வழிச் சாலை திட்டமானது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 250 மீட்டர் உயரத்தில் வரக்கூடிய சமவெளி கால்வாய் ஆகும். 900 கி.மீ., நீளமுள்ள நீர் வழிப்பாதை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை போன்று அமையும்.இமயமலை நீர் வழிச்சாலைகள், மத்திய மற்றும் தெற்கு நீர் வழிச்சாலைகள் என வரைவு செய்யப்பட்டுள்ளது. இமயமலை நீர் வழிச்சாலைகள் மேற்கிலிருந்து கிழக்காக நாடு முழுவதையும் இணைக்கும். மத்திய மற்றும் தெற்கு நீர்வழிச்சாலைகள் மத்திய மற்றும் தெற்கு மாநிலங்களையும் முக்கியமாக கன்னியாகுமரியை இணைக்கும்.
இந்த திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் தண்ணீர், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடலினுள் வீணாகும் தண்ணீரிலிருந்து எடுக்கப்படுகிறது.இந்த நீர் வழிச்சாலைகளில் ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிகளுக்கு நீரை மாற்றி அனுப்ப முடியும். எந்த இடத்திற்கும் தேவையான நீரை, தேவையான அளவுக்கு அனுப்ப முடியும். ஆண்டு முழுவதும் தடையின்றி குடிநீர் கிடைக்கும். 75 லட்சம் ஏக்கர் நிலம் கூடுதலாக பாசன வசதி பெறும். ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.1800 மெகாவாட் மாசற்ற நீர் மின் உற்பத்தி செய்யப்படும். நிலத்தடி நீர் உயர்வதால்
ஆண்டுக்கு 1350 மெகாவாட் மின்சாரம் மீதமாகும். நீர்வழிச்சாலை மூலம் ஆண்டு முழுவதும் குறைந்த செலவில் போக்குவரத்து நடைபெறும். வெள்ளத்தை தடுத்து, தேக்கி தேவையான இடங்களுக்கு அனுப்ப முடியும். புதிய காடுகளை உருவாக்க முடியும். விரைவில் இத்திட்டம் செயல்படுத்தப்படஉள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கல்லுாரி முதல்வர் சரவணன், இயக்குனர்
சந்திரன் உடனிருந்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை