ஆசிரியர் சுட்டுக் கொலையில் நக்சலைட்கள் கைவரிசையா : சி.பி.சி.ஐ.டி., விசாரணை தீவிரம்| Dinamalar

ஆசிரியர் சுட்டுக் கொலையில் நக்சலைட்கள் கைவரிசையா : சி.பி.சி.ஐ.டி., விசாரணை தீவிரம்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

திண்டுக்கல்: குஜிலியம்பாறை அருகே ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டது நக்சலைட் கும்பலா என்ற கோணத்தில் விசாரணையை சி.பி.சி.ஐ.டி., போலீசார் துவக்கியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம் பாறை கரிக்காலியை சேர்ந்தவர் முத்துச்சாமி,26. இவர் லந்தைக்கோட்டை அரசு உதவிபெறும் பள்ளியில் 2 ஆண்டுகள் பணியாற்றினார்.
கடந்த 2011ல் இவர் பள்ளி முடிந்து விட்டு, வீட்டிற்கு பைக்கில் செல்லும் போது ,குவாரி ரோடு அருகே மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இவர் ஓட்டிச் சென்ற பைக், கழுத்தில் கிடந்த தங்கச் செயின், கடிகாரம் எதுவும் திருடுபோகாமல் அப்படியே கிடந்தது.
இந்த வழக்கை கடந்த 3 ஆண்டுகளாக, உள்ளூர் போலீசார் விசாரணையில் எந்த வித முன்னேற்றமும் இல்லை. ஆசிரியரின் தந்தை புகாரின் பேரில், திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி., போலீசார் இந்த வழக்கை விசாரிக்கின்றனர்.

புதிய திருப்பம் : சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையில், ஆசிரியரை துப்பாக்கி யால் சுட்டுக் கொல்லும் அளவிற்கு அந்த பகுதி யில் யாரிடமும் துப்பாக்கி இல்லை. முன்விரோதமும் இருக்கவில்லை. மேலும் தலையை குறிபார்த்து சுடும் அளவிற்கு பயிற்சி பெற்றவர்களே இதனை செய்திருக்க முடியும். குஜிலியம்பாறையில் பதுங்கி இருந்த நக்சலைட்கள் மூலம் இந்த கொலையை நிகழ்த்தி இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. இதனால் இந்த
பகுதியில் இருந்த ஏற்கனவே இருந்த நக்சலைட்களிடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டு
உள்ளனர்.இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுஉள்ளதாகவும், விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம் எனவும் சி.பி.சி.ஐ.டி., போலீசார் தெரிவித்தனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.