அடுத்த கட்டம் இரட்டை இலை: பழனி - பன்னீர் கூட்டணி ஆயத்தம் Dinamalar
பதிவு செய்த நாள் :
அடுத்த கட்டம் இரட்டை இலை:
பழனி - பன்னீர் கூட்டணி ஆயத்தம்

பொதுக்குழுவை கூட்டி, அனைவருடைய ஒப்புதலோடு, கட்சியில் இருந்து சசிகலாவை காலி செய்த சூட்டோடு, அடுத்த கட்டமாக, அ.தி.மு.க., கட்சி பெயரை, இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றும் நடவடிக்கைகளை, முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் மேற்கொண்டுஉள்ளனர்.

இரட்டை இலை,Irattai ilai, பழனி ,Palani,  பன்னீர் , Panneer, அ.தி.மு.க பொதுக்குழு,  AIADMK General Council,சசிகலா,Sasikala, அ.தி.மு.க,AIADMK, முதல்வர் பழனிசாமி,Chief Minister Palanisamy,  துணை முதல்வர் பன்னீர்செல்வம்,Deputy Chief Minister Panneerselvam, தேர்தல் கமிஷன், Election Commission,  தினகரன், Dinakaran,

ஜெ., மறைவுக்கு பின், அ.தி.மு.க., இரு அணிகளாக பிளவுபட்டது. சென்னை, ஆர்.கே.நகர் இடைதேர்தலில், இரு அணிகளும், இரட்டை இலை சின்னத்தை கோரின. அதனால், தேர்தல் கமிஷன்,அந்த சின்னத்தை முடக்கியது. அ.தி.மு.க., என்ற பெயரை பயன்படுத்தவும், தடை விதித்தது.

பிளவுபட்ட அணிகளுக்கு, 'அ.தி.மு.க., - அம்மா, அ.தி.மு.க., - புரட்சித் தலைவி' என, பெயர் சூட்டப்பட்டது. இரு அணிகளும் தனித்து போட்டியிட்டன. ஆனால், தினகரன் தரப்பில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய பட்டதால், தேர்தல் கமிஷன், தேர்தலை ஒத்தி

வைத்தது.அதன்பின், இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக, இரு அணிகள் சார்பிலும், தேர்தல் கமிஷனில், லட்சக்கணக்கான பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன; ஆனாலும், முடிவு எடுக்க படாமல், அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

இந்த சூழலில், தற்போது இரு அணிகளும் இணைந்துள்ளதுடன், முதல் பொதுக்குழுக் கூட்டமும், நேற்று முன்தினம், சென்னையில் நடத்தப்பட்டது. அதில், இரு அணிகள் இணைந்ததற்கு ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.

மேலும், அ.தி.மு.க., கட்சி பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்கவும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு ஏதுவாக, சசிகலாவை பொதுச்செயலர் பொறுப்பில் இருந்து நீக்கினர்.

அவரது நியமனத்தை ரத்து செய்யும் தீர்மானம், பொதுக்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.அடுத்த கட்டமாக, தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்யபட்ட, பிரமாண பத்திரங்களை வாபஸ் பெற்று, கட்சி பெயர் மற்றும் இரட்டை இலை சின்னத்தை மீட்க, முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக, சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து, தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்வதற்கான ஆவணங்களை தயார் செய்து வருகின்றனர். அவற்றில், கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் கையெழுத்து வாங்கும் பணி,தற்போது தீவிரமாக

Advertisement

நடந்து வருகிறது.இது தொடர்பாக, சென்னையில், முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் அவசர ஆலோசனை நடத்தினர்.

அதில் எடுக்கப்பட்ட முடிவுபடி, இன்னும் இரண்டு நாட்களில், அமைச்சர்கள், டில்லி சென்று, ஆவணங்களை சமர்ப்பிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து, தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், 'இரு அணிகளும் இணைந்ததற்கான ஆதாரத்தை அளித்து, பிரமாண பத்திரங்களை, இரு தரப்பினரும் வாபஸ் பெற்றால், கட்சி பெயர் மற்றும் இரட்டை இலை சின்னம், அவர்களுக்கு கொடுக்கப்படும்' என்றனர்.

- நமது நிருபர் -


Advertisement

Advertisement

மேலும் முதல் பக்க செய்திகள்:



வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dandy - vienna,ஆஸ்திரியா
14-செப்-201720:33:55 IST Report Abuse

dandyபடிப்பறிவில்லாத. மக்களுக்கு ஜனநாயகம் சரிப்படாது ...

Rate this:
Kasiniventhan Muthuramalingam - Bangalore,இந்தியா
14-செப்-201711:17:06 IST Report Abuse

Kasiniventhan Muthuramalingamஏன் தாமரை இருக்கலாமே

Rate this:
AURPUTHAMANI - accra,கானா
14-செப்-201711:07:30 IST Report Abuse

AURPUTHAMANIஎல்லோரும் மேலே புலம்புகிறார்கள்,ஆனால் ஒரு கவனமாக ப்ரோக்ராம் செய்யப்பட்ட ப்ராஜெக்ட் போல.எல்லாம் வரிசையாக கவனமாக நடக்கிறது இந்த சத்தத்தில் தெரியவில்லை.மன்னார்குடி வெளியே,admk விற்கு பண்ணீரும் எடப்பாடியும் உரிமையாளர்கள்,கட்சி பெயர் சின்னம் வாங்கப்படும் .இதுதான் டார்கெட்.இதை நோக்கி மெதுவாக ஆனால் சரியாக நகர்கிறார்கள்.ரொம்ப துள்ளும் கீழ்மட்டத்தினர் காணாமல் அடிக்கப்படுவார்கள்.ஆரம்பம் சம்பத் எங்கே?இது ஒரு விவரமான ப்ரோக்ராம். துள்ளும் பெரியவர்கள் அவர்களே வந்து விடுவார்கள்,சரி இதன் முடிவில் டார்கெட் நிச்சியம்,ஆனால் மக்கள்,AIADMK தொண்டர்கள் அடுத்த தேர்தலில் என்ன செய்வார்கள் என்று இதில் நிச்சயிக்க முடியாது.எதிர்பார்க்கும் பலநே இல்லாவிட்டால் AIDMK மன்னார்குடி இரண்டும் காணாமல் போய்விடும்.

Rate this:
Franklin Kumar - Chennai,இந்தியா
14-செப்-201711:07:14 IST Report Abuse

Franklin Kumarஇலை சருகாகி ரொம்ப நாள் ஆகிவிட்டது இனி அது உயிர்க்காது

Rate this:
Ahamed Fazal - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
14-செப்-201710:50:59 IST Report Abuse

Ahamed Fazalமக்களே ஓட்டு போட நீங்க 500 ரூபாய் வாக்குறிங்க, ஒட்டு போட பணம் கொடுத்தவன் 500 கோடி சம்பாதிக்கிறான், சிந்திங்க மக்களே போராடுங்க உங்க உரிமைக்காக.

Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
14-செப்-201710:39:07 IST Report Abuse

A.George AlphonseWhat is use of getting back the Two Leaves Symbol for AIADMK party as people of our state are already forgotten the two leaves and the party after the death of Jayalalithaa. These people may complete their full term only on these issues and not going to do any thing for our state now.

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
14-செப்-201710:17:52 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்சின்னாபின்னமாக்கினவனே சிரிச்சிக்கிட்டு நிக்கிறான்.

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
14-செப்-201709:58:36 IST Report Abuse

balakrishnanரெட்டை இல்லை கிடைத்தாலும் உங்களால் மக்களை சந்திக்க முடியாது, அந்த அளவிற்கு மக்கள் உங்கள் மீது வெறுப்போடு இருக்கிறார்கள்

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-செப்-201709:34:34 IST Report Abuse

Srinivasan Kannaiyaபழனிக்கு ஒரு இலை... பன்னீருக்கு ஒரு இலை...

Rate this:
Arachi - Chennai,இந்தியா
14-செப்-201708:50:27 IST Report Abuse

Arachiபணியாட்கள் இரு எஜமானர்கள் கீழ் பணியாற்ற இயலாது என்பார்கள். இவர்கள் விஷயத்திலும் இக்கூற்று பொய்த்துப் போவதில்லை. என்னுடைய உன்னுடைய ஆள்களுக்கு செய்யவில்லை என்ற பிரச்சனை கூடியவிரைவில் தலை தூக்கும். அதிமுக வின் முடிவிற்கு இவர்களுடைய கூட்டு தான் ஆரம்பம்.

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
மேலும் செய்திகள்