பழநி கத்தரி காய்ப்பு குறைந்ததால் விவசாயிகள் கண்ணீர் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பழநி கத்தரி காய்ப்பு குறைந்ததால் விவசாயிகள் கண்ணீர்

Added : செப் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பழநி: ஒட்டன்சத்திரம், பழநி பகுதியில் கத்தரிக்காய் வரத்து குறைந்த போதும் எதிர்பார்த்த விலைஇல்லாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி, ஒட்டன்சத்திரம் பகுதிகளான சத்திரப்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, காளிப்பட்டி, கணக்கன்பட்டி, ஆயக்குடி, பாலசமுத்திரம், பாப்பம்பட்டி, கரடிகூட்டம் உள்ளிட்ட பல இடங்களில் தக்காளி, கத்தரி, வெண்டைஉள்ளிட்ட காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது.
போதிய மழைஇல்லாததால் 'டிஸ்கோ' கத்தரிக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் வெளியூர்களில் இருந்து வரத்துஉள்ளதால், ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் விலை வீழ்ச்சியடைந்துஉள்ளது.சிலமாதங்களுக்கு முன் ஒரு மூடை(30கிலோ) ரூ.600 முதல் ரூ.1000 வரை விலைபோனது. தற்போது ஒரு மூடை ரூ. 300 முதல் ரூ.400 வரையே விலைபோகிறது.
இதனால் விதைப்பு, மருந்து, உரம், காய் பறிப்பு, ஏற்றுக்கூலி செலவுகள் போக செல
வழித்த முதலீடை எடுக்க முடியவில்லை. இவ்வாண்டு கத்தரிக்காய் சாகுபடியில் ரூ.பல ஆயிரம் இழப்பை சந்தித்துஉள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை