-பெரியகுளத்தில் 52 பவுன் நகை கொள்ளை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

-பெரியகுளத்தில் 52 பவுன் நகை கொள்ளை

Added : செப் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளத்தில் வீட்டின் கதவை உடைத்து பீரோவை கண்மாய் கரைக்கு துாக்கிச்சென்ற மர்மநபர்கள், அதில் இருந்த 52 பவுன் நகையை கொள்ளை
யடித்துச் சென்றனர்.
பெரியகுளம் தென்கரை பாரதி நகரைச்
சேர்ந்தவர் அப்துல்ரஹீம், 63. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவில் வீட்டில் குடும்பத்தினருடன் துாங்கினார்.
நேற்று அதிகாலை பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு எழுந்த அவர், வீட்டின் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். சத்தம் போடவே
உறவினர்கள் கதவை திறந்து விட்டனர்.
நள்ளிரவில் வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ள புகுந்த மர்ம
நபர்கள், அப்துல்ரஹீம் மற்றும் அவரது
குடும்பத்தினர் துாங்கிக் கொண்டிருந்த அறையை வெளிப்புறமாக பூட்டியுள்ளனர்.
மற்றொரு அறையில் இருந்த பீரோவை திறந்து, அதிலிருந்த துணிகளை வீசிவிட்டு, பீரோவை 40 அடி துாரத்தில் உள்ள தாமரைக்குளம் கண்மாய் கரைக்கு துாக்கிச் சென்று உடைத்தனர். அதிலிருந்த ரூ.11 லட்சம் மதிப்பு
உள்ள 52 பவுன் தங்க நகை, ரூ.55 ஆயிரத்தை
கொள்ளையடித்தனர். இந்த தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
மோப்பநாய் பென்னி சோதனை செய்தது. கைரேகை நிபுணர் வசந்தி தடயங்களை சேகரித்தார். டி.எஸ்.பி., வினோஜி தலைமையில் தென்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை