35 அமைப்புகளுடன் டுவிட்டர் ஒப்பந்தம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

35 அமைப்புகளுடன் டுவிட்டர் ஒப்பந்தம்

Added : செப் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: 'டுவிட்டர்' சமூக வலைதளத்தை பயன்படுத்துவோருக்கு கூடுதல் வீடியோ பதிவுகளை அளிக்கும் வகையில், ஆசியா பசிபிக் பிராந்தியத்தில், 35 அமைப்புகளுடன், அந்த நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.இது குறித்து, 'டுவிட்டர்' சமூக வலைதளம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:விளையாட்டு, செய்தி, சினிமா, பொழுதுபோக்கு உள்ளிட்டவற்றில் நேரடி செய்திகளை, வீடியோக்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது; இதற்கு அதிக வரவேற்பும் உள்ளது. அதனால், பல்வேறு அமைப்புகளின் வீடியோ உள்ளிட்டவற்றை டுவிட்டரில் பயன்படுத்துவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.ஆசியா பசிபிக் பிராந்தியத்தில், 35 அமைப்புகளுடன் இவ்வாறு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சர்வ தேச கிரிக்கெட் கவுன்சில், பிலிம்பேர் விருதுகள், என்.டி.டி.வி., கிரிக்கெட் பஸ் உள்ளிட்டவற்றின் வீடியோக்களை, இனி டுவிட்டரில் பயன்படுத்தலாம்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை