ஓசூரில் விமான சேவை துவங்குமா? கர்நாடகா முட்டுக்கட்டையால் இழுபறி Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஓசூரில் விமான சேவை துவங்குமா?
கர்நாடகா முட்டுக்கட்டையால் இழுபறி

ஓசூர்:'ஓசூரில், விமான சேவை துவங்கப்படும்' என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கர்நாடகா அரசு முட்டுக்கட்டை போடுவதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

 ஓசூர்,Hosur, விமான சேவை,Air Service,  கர்நாடகா , Karnataka, மத்திய அரசு,Central Government,  சென்னை, Chennai, உதான் திட்டம், Udan Plan,  பெங்களூரு, Bangalore, பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி, Bengaluru Electronic City, விமான நிலையம், Airport,

தமிழகம் - கர்நாடகா எல்லையில் உள்ள, ஓசூரில் இருந்து சென்னைக்கு, 'உதான்' திட்டத்தில், புதிய விமான சேவையை துவங்க, மத்திய அரசு திட்டமிட்டது. 'செப்டம்பரில் விமான சேவை துவங்கும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டது.ஓசூரில் விமான நிலையம் இல்லாததால், ஓசூர் அடுத்த சின்ன பேலகொண்டப்பள்ளியில் உள்ள, 'தால்' என்ற தனியார் விமான உதிரிபாகங்கள் தயாரிக்கும் கம்பெனியில் இருந்து, சென்னைக்கு விமானம் இயக்க திட்டமிடப்பட்டது. இதற்காக, தமிழக

அரசுடன், புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்து ஆகி விட்டது. ஆனால், இதுவரை விமான சேவை துவங்கப்படவில்லை. பெங்களூரு அடுத்த, தேவனஹள்ளியில் செயல்படும் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து, 150 கி.மீ.,க்குள், வேறு எந்த விமான நிலையமும் செயல்படக் கூடாது என்ற விதி உள்ளது.

இது மட்டுமின்றி, பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி யில் இருந்து, ஓசூர் வர, 22 கி.மீ., பயணம் செய்தால் போதும். ஆனால், எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து, தேவனஹள்ளி செல்ல, 53 கி.மீ., பயணிக்க வேண்டும்.

பெங்களூரு நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு இடையே அங்கு செல்ல, இரண்டு மணி நேரம் ஆகும். ஓசூரில் விமான சேவை துவங்க பட்டால், எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ளவர்களும், ஓசூர், விமான சேவையை பயன்படுத்ததுவங்கி விடுவர்.

இது, பெங்களூரு விமான நிலையத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், ஓசூரில் விமான சேவையை துவங்க, கர்நாடகா அரசு முட்டுக்கட்டை போடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, ஓசூர் சிறு, குறு தொழிற்சாலைகள் சங்க தலைவர் ஞானசேகரன் கூறியதாவது:

Advertisement

ஓசூரில் விமான சேவையை துவங்க, கர்நாடகா அரசு முட்டுக்கட்டை போடுவது உண்மை தான். எனவே, மத்திய, மாநில அரசுகள், ஓசூரில் விமான சேவை துவங்குவதற்கான ஏற்பாடு, எந்த அளவில் உள்ளது என்பதை தெளிவு படுத்த வேண்டும்.

ஓசூரில் விமான சேவை துவங்கினால், அது கர்நாடகாவை பாதிக்காது. ஏனெனில், இரண்டாம் நிலை உள்ளூர் மாவட்டங்களை இணைப்பதற்கான, விமான சேவை திட்டத்தை தான், ஓசூரில் மத்திய அரசு துவங்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vasanth Saminathan - Trivandrum,இந்தியா
14-செப்-201719:57:38 IST Report Abuse

Vasanth Saminathanநமக்கு நல்லது நடக்கப்போகுதுன்னா அதை கெடுக்க கூட்டி கூட கொடுக்க தயங்க மாட்டான் கர்நாடகாகாரன் .

Rate this:
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
14-செப்-201718:30:31 IST Report Abuse

மலரின் மகள்ஓசூரை ஸ்மார்ட் சிட்டி ஆகா செய்து மிகப் பெரிய மாநகராக வளர்க்கவேண்டும். அதுவே தமிழ் நாட்டிற்கு நலம். பெங்களுருவில் வேலை பார்க்கும் பலர் தமிழர்கள். மேலும் அனைத்து ஐ டி சார்ந்த கம்பனிகளும் ஓசூரை ஒட்டிய பெங்களூரு பகுதியிலேன் இருக்கிறது. ஆஸ்ரயில் விமான சேவை இருந்தால் அனைவருக்கும் நலம். ஆயிரம் ரூபாயில் தமிகள் முழுதுமிருந்து ஓசூருக்கு விமான சேவைகளை வெள்ளி மற்றும் நாயிறு தினங்களிலும் விடுமுறை காலங்களிலும் அதிக அளவில் இயக்கலாம். பெண்கள் நிறைய பேர் இப்போது தனியார் ஆம்னி பேருந்துகளிலும் கர்நாடகாவின் அரசு பேருந்துகளிலும் ஆயிரம் ரூயாபி தந்து பயணிக்கின்றனர். முக்கால் மணிநேரத்தில் பயணம் முடிந்து விடும் என்பதால் நாயிறு கிளம்பி செல்வதற்கு பதில் திங்கள் காலை கிளம்பி பணிக்கு பாதுகாப்பாக செல்ல வசதியாக இருக்கும்,. அது போலவே வெள்ளி மாலை அல்லது இரவிலேயே வீட்டிற்கு திரும்பி விட வசதியாக இருக்கும். உள்ளூர் விமான சேவைகள் அதிகம் வேண்டும். குடும்பத்துடன் வாரவிடுமுறைகளில் சேர்ந்திருக்கவேண்டும். பெண்களுக்கு தங்கள் பெற்றோர் வீட்டில் வாரவிடுமுறை கழிப்பதில் அலாதியான ஆனந்தம் இருக்கும். சமூகம் மேம்படும். மனா அழுத்தம் அறவே இருக்காது.

Rate this:
Mani J - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-செப்-201717:56:14 IST Report Abuse

Mani Jசீக்கிரமா ஓசூர்ல ஏர்போர்ட் தொடங்குங்கப்பா.... நிறைய ஆளுங்க அடிக்கடி பரப்பன அக்ரஹாரா போயிட்டு வர தேவைப்படுது

Rate this:
Sriman - Chennai,இந்தியா
14-செப்-201713:55:54 IST Report Abuse

Srimanஒரு விமான நிலையத்தில் இருந்து, 150 கி.மீ.,க்குள் வேறு எந்த விமான நிலையமும் செயல்படக் கூடாது என்ற விதி உள்ளதா, எங்க இருக்குது. யாருகிட்ட உடுரீங்கான்னும் ரீலு, திருச்சி மதுரை தூத்துக்குடி விமான நிலையங்கள் அருகருகே அமைந்திருக்கவில்லையா? சென்னை புதுச்சேரி விமானநிலையங்கள் அருகருகே அமையவில்லையா? காரைக்கால் விமான நிலையம் திருச்சி மற்றும் புதுச்சேரி விமானநிலையங்களுக்கு அருகாமையில் தானேதயாராகிக்கொண்டு இருக்குது.

Rate this:
14-செப்-201719:46:21 IST Report Abuse

ArunachalamAll are 150 kms apart...

Rate this:
Srinivasan Giridharan - Pondicherry,இந்தியா
14-செப்-201720:28:59 IST Report Abuse

Srinivasan Giridharanபாண்டிச்சேரி டு சென்னை 150 Km தான்...

Rate this:
Arunachalam - Bangalore,இந்தியா
15-செப்-201711:15:02 IST Report Abuse

Arunachalamசென்னை டு புதுச்சேரி 155 kms. Bangalore Airport to Hosur < 80 kms....

Rate this:
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
14-செப்-201713:52:24 IST Report Abuse

பாமரன்இதில் மாநில அரசோ மத்திய அரசோ செய்யறதுக்கு ஒண்ணுமில்லையின்னு தெரியாம நிறைய பேர் ப்ளேம்கேம் விளையாடுறாங்க இங்கே. விமான நிலைய ஆணையம் ஒரு தனி அமைப்பு. உலகெங்கும் உள்ள நடைமுறைப்படி இரு வணிகரீதி விமான நிலையங்களுக்கான இடைவெளி 150 கிமி பாதுகாப்பு காரணங்களுக்காக நடைமுறை படுத்தப்படுவது வழக்கம், . ஆனாலும் தேவைக்கேற்ப அருகில் இருக்கும் விமான நிலையம் ஒத்துழைத்தால் இந்த எல்லை பிரச்சினை தீர்க்கப்படலாம்.. உதாரணங்கள் துபாய்-ஷார்ஜா, பாங்காக், ஷாங்காய், லண்டன், நியூயார்க்.etc பேசி தீர்வு காணவேண்டியது விமான நிலைய நிர்வகிக்கும் கம்பெனிகளிடம். அரசிடம் அல்ல...

Rate this:
14-செப்-201713:33:11 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்எலக்ட்ரானிக் சிட்டியில் நான் வேலை செய்தபோது மும்பையில் இருந்து பெங்களூரு ஏர்போர்ட் வர பயண நேரம் ஒரு மணிநேரம் ஆனால் அங்கிருந்து எலக்ட்ரானிக் சிட்டி வந்துசேர 2 மணி நேரம் , டாக்ஸி கட்டணம் மட்டும் ஆயிரம் ரூபாயை தாண்டும். இதுவே ஓசூரில் என்றால் அரைமணிநேரத்தில் வந்து விடலாம். மேலும் ஓசூர் மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு வருபவர்களும் அந்த தடத்தை பயன்படுத்துவார்கள் , தொழிலும் வளர்ச்சி அடையும். பொறாமை பிடித்த கர்நாடக அரசை புறம் தள்ளி இந்த திட்டத்தை கொண்டுவரவேண்டும்.

Rate this:
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
14-செப்-201717:01:26 IST Report Abuse

பாமரன்கட்சி அடிமையா இருந்தா இப்பிடித்தான்... மத்திய அரசுக்கோ மாநில அரசுக்கோ நிலத்தை குடுக்கறதோட வேலை முடிஞ்சிடும்... மிச்ச வேலைகளை பார்ப்பது தன்னாட்சி பெற்ற விமான நிலைய ஆணையம்தான்... கர்நாடகாவில் காங்கிரஸ் இருக்குன்னா உடன் சொம்பை தூக்கிகிட்டு வந்துடுத்து......

Rate this:
mukundan - chennai,இந்தியா
14-செப்-201711:12:07 IST Report Abuse

mukundanதமிழ்நாட்டில் உள்ள ஒரு நகரில் விமான சேவை துவக்க கர்நாடக முயல்வது முட்டாள் தனம். அவர்களால் வெகு காலத்திற்கு இந்த திட்டத்தை நிறுத்த முடியாது. தமிழக அரசுக்கு ஆதரவாக செயல்பாடு மோடி அரசு நிச்சயம் கர்நாடகாவை ஆதரிக்காது.

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
14-செப்-201709:56:26 IST Report Abuse

balakrishnanஓசூரில் விமான நிலையம் செயல்பட ஆரம்பித்தால் நிச்சயம் வெற்றி பெரும், பெங்களூரு விமான நிலையம் உள்ளூர் விமான போக்குவரத்தில் சிறிது நஷ்டத்தை கண்டிப்பாக சந்திக்கும்

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-செப்-201709:40:55 IST Report Abuse

Srinivasan Kannaiyaவிமான சேவைக்கு முட்டுக்கட்டை... காவேரி தண்ணீருக்கு முட்டுக்கட்டை... சசி அம்மையாருக்கு மட்டும்தான் எல்லா பச்சை கொடிகளும்

Rate this:
ARUN- BLR - Bangalroe,இந்தியா
14-செப்-201708:37:23 IST Report Abuse

ARUN- BLRBangalore ஏர்போர்ட் தேவே கவுடா ஆட்சியில் தேவனஹள்ளியில் அமைக்கப்பட்டது அவரது தொகுதி என்பதால் Bangalore சிட்டியில் இருந்து ஏர்போர்ட் செல்ல 1-2 மணி நேரம் ஆகும் ஓசூரில் சேவை தொடங்கினால் நன்றாக இருக்கும். ஏற்கெனவே ஓசூரில் இருந்து சென்னைக்கு Train சேவை இல்லை மக்கள் 10 வருடங்களாக கோரிக்கை வைத்தும் ஒன்னும் நடக்கல. பிரிட்டிஷ் காலத்திலே ஓசூர் கிருஷ்ணகிரி வழியாக திருப்பத்தூர் கு train இருந்தது.

Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement