19 பேரும் இன்று ஆஜராவார்களா?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

19 பேரும் இன்று ஆஜராவார்களா?

Added : செப் 13, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சபாநாயகர் உத்தரவை ஏற்று, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், இன்று ஆஜராவரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 19 பேரை தகுதி நீக்கம் செய்ய, அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், சபாநாயகருக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்று, சபாநாயகர் தனபால், 19 பேருக்கும், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளார்.
அதற்கு, அவர்கள் இடைக்கால விளக்கம் அளித்தனர். இதையடுத்து, முழு விளக்கம் அளிக்க, செப்., 14ல் நேரில் ஆஜராகும்படி, சபாநாயகர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், நேற்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., வெற்றிவேல், சென்னை, தலைமைச் செயலகம் வந்து, சபாநாயகரை சந்தித்தார். அப்போது, அவர் மேலும் அவகாசம் கேட்டதாகவும், சபாநாயகர் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், சபாநாயகர் முன் ஆஜராக, இன்று வருவரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணுடன், சபாநாயகர் தனபால், நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.

- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Devanatha Jagannathan - puducherry,இந்தியா
14-செப்-201706:08:02 IST Report Abuse
Devanatha Jagannathan அடுத்த சட்டசபை தேர்தலுக்கு இவங்க அணிமாற்றத்தால் வரும் என்றால் கோர்ட் அந்த அயினூறு கோடி செலவை இவங்களை ஏற்றுக்கொள்ள சொல்லணும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை