வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணத்துக்கும், 'ஆதார்' கட்டாயம்?| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணத்துக்கும், 'ஆதார்' கட்டாயம்?

Added : செப் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

புதுடில்லி: வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணத்துக்கும், 'ஆதார்' கட்டாயமாக்கப்பட உள்ளது.வங்கி, 'காஸ்' மானியம், பான் கார்டு, சிம் கார்டு மற்றும் பல்வேறு நலத் திட்ட உதவிகளைப் பெறுவதற்கு, ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 'சமூக நலத் திட்ட உதவிகள் பெறுவதற்கு, டிச., 31க்குள் ஆதாரை பதிவு செய்ய வேண்டும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணங்களுக்கு, ஆதாரை கட்டாயமாக்கும்படி, அமைச்சகங்களுக்கு இடையேயான கமிட்டி, மத்திய வெளியுறவுத் துறைக்கு பரிந்துரை செய்துள்ளது.

இதுகுறித்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அதிகாரிகள் கூறியதாவது: வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களை திருமணம் செய்யும் இந்திய பெண்களில் சிலர், கணவரால் கைவிடப்படுதல், வரதட்சணை கொடுமை ஆகியவற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இத்தகைய குற்றங்களில் ஈடுபடும், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களை கண்டுபிடிப்பதே கடினமாக உள்ளது. இந்திய பெண்கள் மீதான குற்றங்களைத் தடுப்பதற்கு, வெளிநாடு வாழ் இந்தியர்கள், திருமணத்தை பதிவு செய்ய, ஆதாரை கட்டாயமாக்கும்படி, பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆதார் மூலமாக, குற்றச்செயல்களில் ஈடுபடும், வெளிநாடு வாழ் இந்தியர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க முடியும்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய வசதி அறிமுகம் : ரயில்வே வட்டாரங்கள் கூறியதாவது: இந்திய ஆதார் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள, 'எம் ஆதார்' என்ற, 'ஆப்'பை பயன்படுத்தி, ஒருவர், தன், ஆதார் அடையாள அட்டையை, மொபைல்போனுக்கு பதிவிறக்கம் செய்யலாம். ஆதார் அட்டையில், எந்த மொபைல் எண் உள்ளதோ, அந்த எண் பயன்படுத்தப்படும் மொபைல்போனில் மட்டுமே, இந்த, 'ஆப்'பை பதிவிறக்கம் செய்ய முடியும். ரயில்களில், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்யும் பயணியர், பயணத்தின்போது, தங்கள் மொபைலில் உள்ள இந்த, 'ஆப்'பை பயன்படுத்தி, டிஜிட்டல் வடிவ ஆதாரை காட்டினால், அதை அடையாள அட்டையாக ஏற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை