'சேவை கட்டணமும் வருமானம் தான்'| Dinamalar

பொது செய்தி

இந்தியா

'சேவை கட்டணமும் வருமானம் தான்'

Added : செப் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படும் சேவை கட்டணமும், ஓட்டல்களின் வருமானமாக கணக்கிட, மத்திய நேரடி வரிகள் வாரியத்துக்கு, மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சி தலைவருமான, ராம்விலாஸ் பஸ்வான் அறிவுறுத்தியுள்ளார். 'ஓட்டல்களில், சேவை கட்டணம் வசூலிக்கப்படுவது கட்டாயமல்ல' என, மத்திய அரசு அறிவித்து உள்ளது. எனினும், சில ஓட்டல்களில், வாடிக்கையாளர்களின் மொத்த, 'பில்' தொகையில், 5 - 20 சதவீதம் சேவை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சேவை கட்டணம் செலுத்தக் கோரி, வாடிக்கையாளர்களை, ஓட்டல் நிர்வாகிகள் கட்டாயப்படுத்துவதாக, புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், வருமான வரித் தாக்கலின் போது, ஓட்டல்கள் வசூலிக்கும், சேவை கட்டண மும், அதன் வருமானமாக கணக்கிட, மத்திய நேரடி வரிகள் வாரியத்திற்கு, மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர்ராம்விலாஸ் பஸ்வான் வலியுறுத்திஉள்ளார். இது குறித்து, நேரடி வரிகள் வாரியத்துக்கு, அமைச்சர் பஸ்வான் கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை