அமராவதி ஆயக்கட்டு பகுதியில்... நம்பிக்கை விதைப்பு !  நீர் மட்டம் உயர்வால் மகிழ்ச்சி| Dinamalar

 அமராவதி ஆயக்கட்டு பகுதியில்... நம்பிக்கை விதைப்பு !  நீர் மட்டம் உயர்வால் மகிழ்ச்சி

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
 அமராவதி ஆயக்கட்டு பகுதியில்...  நம்பிக்கை விதைப்பு !   நீர் மட்டம் உயர்வால் மகிழ்ச்சி

உடுமலை : அமராவதி அணையின் நீர் மட்டம், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் முன்பே, உயர்ந்து, நெல் சாகுபடி விவசாயிகளுக்கு நம்பிக்கை அளித்துள்ளது. ஆயக்கட்டு பகுதியிலும் பரவலாக பெய்துள்ள மழையால், நாற்றங்கால் அமைக்க பணிகள் துவங்கியுள்ளன.


உடுமலை அமராவதி அணைக்கு, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில், நீர் வரத்து கிடைக்கிறது. அணையின் கொள்ளளவான 4 டி.எம்.சி., தண்ணீரை பயன்படுத்தி, திருப்பூர், கரூர் மாவட்டத்துக்குட்பட்ட, 55 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு, பாசனத்துக்கு தண்ணீர் வழங்கப்பட்டது. இதில், பழைய ஆயக்கட்டு பகுதிக்கு, அமராவதி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரை பயன்படுத்தி, மூன்று போகங்களில், நெல் சாகுபடி செய்யப்பட்டது. பிரதான கால்வாயில், புதிய ஆயக்கட்டு பகுதிக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த ஆயக்கட்டில், நெல், கரும்பு, தென்னை பிரதான பயிராக உள்ளது.மழைப்பொழிவு குறைவு, அணையின் நீர் தேக்க பரப்பில் தேங்கிய மகுளி மண்ணை துார்வார முடியாதது போன்ற காரணங்களால், முப்போக நெல் சாகுபடி கைவிடப்பட்டது. குறிப்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, மழை குறைந்து, இரு மாவட்ட குடிநீர் தேவைக்கு கூட, அணையில் இருப்பு இல்லாத நிலை ஏற்பட்டது.தென்மேற்கு பருவமழையின் போது கிடைத்த வரத்து, குடிநீர் மற்றும் உயிர் தண்ணீர் அடிப்படையில், குறுகிய நாட்கள், பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிக்கு வழங்கப்பட்டது. நெல் விளைந்த வயல்களில், வறட்சியை தாங்கி வளரும் எள் விதைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக எவ்வித சாகுபடியும் மேற்கொள்ளப்படாமல், விளைநிலங்கள், கால்நடைகளின் மேய்ச்சல் பகுதியாக மாறியிருந்தது.கூடுதலாக தேக்கலாம் !நீர்பிடிப்பு பகுதிகள் அமைந்துள்ள மூணாறு, மறையூர் மேற்குத்தொடர்ச்சி மலையில், பெய்த மழை காரணமாக, அணைக்கு கடந்த இரு வாரங்களாக நிலையான வரத்து கிடைத்து வருகிறது. நேற்றைய காலை நிலவரப்படி, அணையின் நீர் மட்டம், 90 அடிக்கு, 75.43 அடியாக உயர்ந்தது. வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் முன்பே, நீர் மட்டம், 75 அடியை தொட்டுள்ளதால், நெல் சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன், அணையின் நீர் தேக்க பரப்பில், தேங்கியிருந்த மகுளி மண்ணை இலவசமாக அள்ளி கொள்ள அரசு அனுமதியளித்தது. இதையடுத்து, கூட்டாறு, அணையில் சேரும் பகுதியை சுற்றிலும் தேங்கியிருந்த மண்ணை விவசாயிகள் அள்ளியுள்ளனர். எனவே, இம்முறை, சற்று கூடுதலாக தண்ணீர் தேக்க முடியும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.