கங்கையில் குப்பை போடுவோரை புகைப்படம் எடுத்து அனுப்பினால் பரிசு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கங்கையில் குப்பை போடுவோரை புகைப்படம் எடுத்து அனுப்பினால் பரிசு

Added : செப் 14, 2017 | கருத்துகள் (15)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 குப்பை,Garbage,  புகைப்படம், photo, கங்கை நதி,Ganga River,   துாய்மை, purity, உத்தரகண்ட், Uttarakhand, ருத்ரபிரயாகை,Rudraprayagai, முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், chief minister Thrivedra Singh Rawat,பா.ஜ.,BJP,  கலெக்டர் மங்கேஷ் கில்டி, collector Mangesh Gildi,  சிறை தண்டனை,jail, பரிசு,Gift, கங்கை,Ganga,

ருத்ரபிரயாகை: கங்கை நதியை துாய்மையாக்கும் திட்டத்தின் கீழ், நதியில் குப்பை போடுபவர்களை புகைப்படம் எடுத்து அனுப்புவோருக்கு பரிசு வழங்க, உத்தரகண்ட் மாநிலம், ருத்ரபிரயாகை நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


நடவடிக்கை:

உத்தரகண்ட் மாநிலத்தில், முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ருத்ரபிரயாகையில், புனித கங்கை நதி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில், குப்பை போடுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில், ருத்ரபிரயாகை நகர நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.


500 ரூபாய் பரிசு:

இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, கலெக்டர் மங்கேஷ் கில்டியால் கூறியதாவது: நதியில் குப்பை போடுவோர் மீது வழக்கு பதிவு செய்து, சிறை தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நதி மற்றும் கரையோரங்களில் குப்பை போடுபவர்களை புகைப்படம் எடுத்து, அனுப்புவோருக்கு, 500 ரூபாய் பரிசு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JAYARAMAN - CHENNAI,இந்தியா
14-செப்-201714:06:11 IST Report Abuse
JAYARAMAN Just i want to know how much of water goes to the sea, from ganges, per month.
Rate this:
Share this comment
Cancel
Sekar KR - Chennai,இந்தியா
14-செப்-201713:37:06 IST Report Abuse
Sekar KR இதுபோன்று ஹெல்மெட் இல்லாமல் செல்பவர்கள் , செல்போன் பேசிக்கொண்டு செல்பவர்கள் வாகன எண்ணுடன் புகைப்படம் எடுத்து அனுப்பச்சொல்லுங்கள். அந்த அவர்களுக்கு அபராதம் விதியுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
14-செப்-201709:42:37 IST Report Abuse
Arivukkarasu Good idea pay 500nd fine 5000.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை