'ஆதார்' தகவல்கள் திருடப்படுமா?| Dinamalar

பொது செய்தி

இந்தியா

'ஆதார்' தகவல்கள் திருடப்படுமா?

Added : செப் 14, 2017 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஆதார்,  Aadhaar ,   மொபைல் போன்,Mobile phone, கிரிமினல் குற்றம்,Criminal offense, சிம் கார்டு, SIM card, பயோ மெட்ரிக்,bio metric,  ஆதார் அட்டை,Aadhaar card, பயங்கரவாதிகள், terrorists, தேச விரோதிகள், National antagonists,யு.ஐ.டி.ஏ.ஐ.,UIDAI,

'ஆதார்' தகவல்களை, மொபைல் போன் எண்ணுடன் இணைத்த பின், அவற்றை தொலை தொடர்பு நிறுவனங்கள், மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்; இல்லையெனில், அது, கிரிமினல் குற்றமாக கருதப்படும் என, கூறப்பட்டுள்ளது.


தயக்கம்:

பயங்கரவாதிகள், தேச விரோதிகள், 'சிம் கார்டு' பயன்படுத்துவதை தவிர்க்க, மொபைல் போன் உபயோகிப்பாளர்கள், தங்கள் எண்ணுடன், ஆதார் எண்ணை, 2018 பிப்ரவரிக்குள் கட்டாயம் இணைக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக, அனைத்து தொலைபேசி நிறுவனங்களும், தங்கள் கிளையிலோ அல்லது முகவர்களிடமோ, வாடிக்கையாளரின் கைவிரல் ரேகை பதிவை பெறுவதற்காக, 'பயோ மெட்ரிக்' கருவியை தந்துள்ளன. அதன் வாயிலாக, வங்கி கணக்கு, பான் கார்டு உள்ளிட்ட தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும். இதனால், பொதுமக்களுக்கு தயக்கம் ஏற்பட்டுள்ளது.


பயம் தேவையில்லை:

இது குறித்து, ஆதார் அட்டை வழங்கும், யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், தனித்துவ அடையாள எண் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: 'பயோ மெட்ரிக்' விபரங்களை பெறும், தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள், அதை உடனுக்குடன், 'என்கிரிப்ட்' என்ற, சங்கேத மொழிக்கு மாற்றி, எங்களுக்கு அனுப்பி வைத்து விடுகின்றன. மாறாக, தகவல்களை சேமித்து வைத்தால், ஆதார் சட்டப்படி, அது கிரிமினல் குற்றமாகும்; மூன்றாண்டு வரை தண்டனை கிடைக்கும். எனவே, பயம் தேவையில்லை; தகவல்கள் திருடப்படாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
15-செப்-201711:00:20 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஜியோ கம்பெனியும் மற்ற கம்பெனிகளும் தகவல்களை மட்டுமல்ல, உங்களின் பயோமெட்ரிக் அடையாளங்களையும் திருடி வைத்துள்ளது. இவங்க எதுவும் நடக்காதது மாதிரி பாவலா காட்டிக்கிட்டு திருடப்படுமான்னு கேக்குறாங்க.. ஏற்கனவே திருடியாகி விட்டது மக்களே. இனி என்னிக்கி வில்லங்கம் வரப்போகுது என்பதும், என்ன மாதிரி வில்லங்கம் என்பதும் தான் கேள்வி.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-செப்-201710:08:53 IST Report Abuse
Srinivasan Kannaiya வர வர இந்தியா மனநோயாளிகள் கூடாரமாக ஆகிவிட்டது...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-செப்-201710:08:09 IST Report Abuse
Srinivasan Kannaiya அதாவது ஏழைபாழைகளை போட்டு தள்ள இப்பிடி ஒரு ஏற்பாடு...
Rate this:
Share this comment
Cancel
spr - chennai,இந்தியா
15-செப்-201708:40:09 IST Report Abuse
spr "இது குறித்து, ஆதார் அட்டை வழங்கும், யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், தனித்துவ அடையாள எண் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: 'பயோ மெட்ரிக்' விபரங்களை பெறும், தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள், அதை உடனுக்குடன், 'என்கிரிப்ட்' என்ற, சங்கேத மொழிக்கு மாற்றி, எங்களுக்கு அனுப்பி வைத்து விடுகின்றன. மாறாக, தகவல்களை சேமித்து வைத்தால், ஆதார் சட்டப்படி, அது கிரிமினல் குற்றமாகும் மூன்றாண்டு வரை தண்டனை கிடைக்கும்" ஒரு தமிழ் படத்தில் வந்த வசனம் "இவனை ஒழிச்சுட்டா 7 வருஷம்தான்னா இப்பவே இவனை ஒழிச்சுட்டு ஜெயிலுக்குப் போறேன் ஒரு பிரச்சினை நிரந்தரமா தீரும்" . இதுதான் குற்றவாளிகளின் மனநிலை ஒரு ஆதாயம் அடைய 3 வருஷம்தான் ஜெயிலன்னா, அடையும் ஆதாயம் அதிகமானதாக இருந்தால், எவரும் முயற்சிப்பர் . 'ஆதார்' தகவல்களை, மொபைல் போன் எண்ணுடன் இணைத்த பின், அந்த தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களின் கணிணியில் அவை சேமித்து வைக்கப்பட வாய்ப்புள்ளது 'பயோ மெட்ரிக்' விபரங்களை பெறும், தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள், அதை உடனுக்குடன், 'என்கிரிப்ட்' என்ற, சங்கேத மொழிக்கு மாற்றி, எங்களுக்கு அனுப்பி வைத்து விடுகின்றன. என்பதற்கு கால கட்டுப்பாடுகள் இல்லை அவை சேமித்து வைக்கப்படுகிறதா என்று அறிவதுவும் அவ்வளவு எளிதல்ல. தொலைத்தொடர்பு சாதனங்கள் இணைப்புக்கள் முன்னேற்றமடைந்திருக்கின்றன எனும் பொழுது, ஏன் அந்தத் தகவல்கள் நேரடியாக ஆதார் சேவைக்கு கணிணிகளில் பதிவதில்லை? அந்த தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களின் கணிணியில் அவை சேமித்து வைக்கப்பட வேண்டிய அவசியம் என்ன? வருமான வரி அட்டை சமையல் எரிவாயு இணைப்பு, வங்கி கணக்குகள் இவை போன்ற முக்கியமான தகவல்களே நேரடியாக அந்த அந்த சேவை கணிணிகளில் உடனடியாகப் பதியப்படும் பொழுது, அவர்களே இணைப்பு சேவையும் வழங்கும் நிலையில் இருக்கும் பொழுது அதுவும் மின்னல் வேக சேவை என்றெல்லாம் விளம்பரம் செய்து கொள்ளும் பொழுது, இதில் மட்டும் அந்த தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களின் கணிணியில் அவை சேமித்து வைத்து அனுப்ப வேண்டுமென சொல்லப்படுவதேன்? இந்த பதில் நியாயமானதாகத் தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
N. Sridhar - Kanchipuram  ( Posted via: Dinamalar Windows App )
14-செப்-201702:50:13 IST Report Abuse
N. Sridhar என்னமோ நடக்குது, மர்மமாய் இருக்குது, ஒன்னுமே புரியலே நம் நாட்டுலே! இறைவா மக்களை காப்பாற்று!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை