அடங்கமாட்டறாங்கப்பா...! 21 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அடங்கமாட்டறாங்கப்பா...! 21 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் கைது

Added : செப் 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement


திருநெல்வேலி, நெல்லையில் 21 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம் மேலநீலிதநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலராக இருப்பவர் பிச்சுமணி 55.இவர்
பனவடலிசத்திரத்தை சேர்ந்த பொன்ராஜ் 35, என்ற ஒப்பந்தக்காரருக்கு 7 லட்சம் ரூபாய்
மதிப்பில், ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் வழங்கும் இரண்டு ஒப்பந்த பணிகளை
வழங்குவதற்கு, 5 சதவீதமான 35 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார்.பொன்ராஜ், 21 ஆயிரம் ரூபாய்
பணம் தர ஒப்புக்கொண்டார். பின்னர் இதுகுறித்து லஞ்சஒழிப்பு போலீசில் புகார் செய்தார். டிஎஸ்பி மதியழகன் தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர். அலுவலகத்தில் பொன்ராஜ் தந்த
பணத்தை வாங்கிய பி.டி.ஓ.,பிச்சுமணி கைது செய்யப்பட்டார்.
அவருக்கு சொந்த ஊர் நெல்லை மாவட்டம் ஊத்துமலையாகும். அவரது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை