கேரி பேக்கிற்கு ரூ 6 வசூலித்த ரிலையன்ஸ்க்கு ரூ 8 ஆயிரம் அபராதம் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கேரி பேக்கிற்கு ரூ 6 வசூலித்த ரிலையன்ஸ்க்கு ரூ 8 ஆயிரம் அபராதம்

Added : செப் 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement


திருநெல்வேலி, கம்பெனி விளம்பரத்துடன் கூடிய கைப்பைக்கு 6 ரூபாய் வசூலித்த
ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 8 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது.
திருநெல்வேலி, ரெட்டியார்பட்டியை சேர்ந்த முத்து கிருஷ்ணன்,
2015 செப்டம்பர் 22ல், வண்ணாரப்பேட்டை ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட்டில்
பொருட்கள் வாங்கினார். அதனை கொண்டுசெல்லும் கேரி பேக்கிற்கு 6 ரூபாய் வசூலித்துள்ளனர்.
இதுகுறித்து முத்துக்கிருஷ்ணன் நெல்லை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கறிஞர் பிரம்மா ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி நாராயணசாமி,
அந்த நிறுவனத்தின் விளம்பரம் அச்சிடப்பட்ட பைக்கு கட்டணம் வசூலித்தது
சேவை குறைபாடாகும். எனவே நுகர்வோரின் மன உளைச்சலுக்கு 5 ஆயிரம் ரூபாய்,
வழக்கு செலவுக்கு 3 ஆயிரம் என மொத்தம் 8 ஆயிரம் ரூபாயை 1 மாத காலத்திற்கு ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும், தவறும் பட்சத்தில் 6 சதவிகித வட்டியுடன் முத்து கிருஷ்ணனுக்கு கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை