முறைகேடாக நிலத்தடி நீர் சப்ளை தூத்துக்குடியில் 14 லாரிகள் பறிமுதல் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முறைகேடாக நிலத்தடி நீர் சப்ளை தூத்துக்குடியில் 14 லாரிகள் பறிமுதல்

Added : செப் 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement


தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டத்தில் முறைகேடாக நிலத்தடி நீர் எடுத்த 14 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த மூன்று ஆண்டுகளாக போதிய மழையின்மையால்
நிலத்தடி நீர் வெகுவாக குறைந்துள்ளது. அணைகளில் நீர்மட்டம் குறைவானதால் தாமிரபரணியிலும்
நீர்வரத்து குறைந்துவிட்டது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு
தண்ணீர் மிக அவசியமாக உள்ளது.எனவே பல்வேறு இடங்களில் ஆழ்குழாய்கிணறு அமைத்து தண்ணீரை உறிஞ்சி தொழிற்சாலைகளுக்கு வணிகரீதியில் விற்பது நடக்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டுஞூ என நிலத்தடி நீர் பாதுகாப்பு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டுவந்தனர்.
இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், முறைகேடாக நிலத்தடிநீர் எடுக்கப்பட்டு வரும் இடங்களை சோதனையிட்டனர். தூத்துக்குடி அருகே 6 இடங்களிலும், ஸ்ரீவைகுண்டம் அருகே
4 இடங்களிலும் நிலத்தடிநீர் எடுக்கப்படுவது தெரியவந்தது.அதனை தடை செய்யும் பொருட்டு குற்றவியல் விசாரணை நடைமுறை சட்டம் பிரிவு 133-ன் கீழ் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதகாலத்தில் முறைகேடாக நிலத்தடிநீரை எடுத்து சென்ற 14 லாரிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள்
தெரிவித்தனர். தொடர்ந்து சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை