லாலுவின் மூத்த மகன் மீதும் வழக்கு| Dinamalar

லாலுவின் மூத்த மகன் மீதும் வழக்கு

Added : செப் 14, 2017 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
லாலு,Lalu, லாலு மகன்,Lalu son, தேஜ் பிரதாப் யாதவ், Tej Pratap Yadav, மிசா பார்தி, Miza Bharti, லாலு மனைவி ரப்ரி தேவி, Lalu wife Rabri Devi, ராஷ்ட்ரீய ஜனதா தளம்,Rashtriya Janata Dal, லாலு பிரசாத் யாதவ்,Lalu Prasad Yadav, ரயில்வே அமைச்சர், Railway Minister, முதல்வர் நிதிஷ் குமார் ,Chief Minister Nitish Kumar, ஐக்கிய ஜனதா தளம், United Janata Dal, அமலாக்கத் துறை, Enforcement Department, சுராஜ் நந்தன் பிரசாத் ,Suraj Nandan Prasad, வழக்கு, Case,பாட்னா, Patna,

பாட்னா: தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், சொத்து விபரங்களை மறைத்ததாக, லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன், தேஜ் பிரதாப் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.


லஞ்ச வழக்கு:

பீஹாரில், முதல்வர், நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. அம்மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான, லாலு பிரசாத் யாதவ், ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ரயில்வே துறை ஓட்டல்களை குத்தகைக்கு வழங்கியதில், லஞ்சம் பெற்றதாக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.


வழக்கில் இளைய மகன்:


இந்த வழக்கில், லாலுவின் மனைவி ரப்ரி தேவி, மகளும், எம்.பி.,யுமான, மிசா பார்தி மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள வழக்கில், லாலுவின் இளைய மகனும், பீஹார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.


மூத்த மகன் மீதும்...

இந்நிலையில், லாலு பிரசாத் யாதவின் மூத்த மகனும், பீஹார் முன்னாள் அமைச்சருமான, தேஜ் பிரதாப் யாதவ், 2015 சட்டசபை தேர்தலின்போது, வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், சொத்து விபரங்களை மறைத்ததற்காக, அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, வழக்கு தொடரப்பட்டுள்ளது. பா.ஜ.வைச் சேர்ந்த, எம்.எல்.சி.,யான, சுராஜ் நந்தன் பிரசாத், பாட்னா முதன்மை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனு தாக்கல் செய்துள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-செப்-201708:58:15 IST Report Abuse
Srinivasan Kannaiya லாலு வீட்டையே சிறைச்சாலையாக மாற்றிவிட்டால்.. தனி தனியாக கைது செய்ய தேவை இல்லை...
Rate this:
Share this comment
Cancel
14-செப்-201706:10:25 IST Report Abuse
உஷாதேவன் நல்ல தொரு குடும்பம் பல் கொள்ளை கழகம் ( லாலுவின் மூத்த மகன் மீது) பகுதிக்கு கருத்துப் பதிவு 14-9-2017.
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
14-செப்-201704:13:25 IST Report Abuse
Kasimani Baskaran எல்லையில்லாமல் கொள்ளை அடித்தால் இதுதான் நடக்கும்...
Rate this:
Share this comment
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
14-செப்-201703:47:22 IST Report Abuse
Rpalnivelu நம்ம கட்டுமர கம்பெனிக் கட்சியின் முதலாளி, வாரிசுகளிடம் வந்து விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்வது எப்படி என்று அறிந்து செல்லவும்.
Rate this:
Share this comment
Cancel
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
14-செப்-201702:41:14 IST Report Abuse
ilicha vaay vivasaayi (sundararajan) அருமை லாலுவின் குடுமப மகிமையை உலகத்திற்கு காண்பியுங்கள் இவங்க அடிச்ச காச வெச்சே பீகார்ல கல்வி 100 % குடுக்கலாம் போல இருக்கே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை