மருத்துவம் படித்தது கருணாநிதி போட்ட பிச்சையா: தமிழிசை ஆவேசம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மருத்துவம் படித்தது கருணாநிதி போட்ட பிச்சையா: தமிழிசை ஆவேசம்

Added : செப் 14, 2017 | கருத்துகள் (111)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கருணாநிதி,karunanidhi,  தமிழிசை சௌந்தரராஜன், Tamilisai Soundararajan, தி.மு.க, D.M.K, மருத்துவம், Medicine,ஸ்டாலின், Stalin, பா.ஜ மாநில தலைவர் தமிழிசை,BJP state president thamilisai,  நீட் நுழைவுத்தேர்வு,  Neet Entrance exam, பா.ஜ.,  BJP, தமிழகம், Tamilnadu,தமிழிசை,Tamilisai ,

சென்னை: ''நான் மருத்துவம் படித்தது, கருணாநிதி போட்ட பிச்சை என, ஸ்டாலின் கூறியிருப்பது தவறு,'' என, பா.ஜ., மாநில தலைவர், தமிழிசை தெரிவித்துள்ளார்.


வார்த்தை மோதல்:

மருத்துவ சேர்க்கைக்கான, 'நீட்' நுழைவுத்தேர்வு தொடர்பாக, தமிழகத்தில், பா.ஜ.,வுக்கும், எதிர் கட்சிகளுக்குமிடையே, வார்த்தை மோதல் வெடித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, 'தமிழிசை மருத்துவ படிப்பில் சேர்ந்தது, கருணாநிதி போட்ட பிச்சை' என, ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.


சிறந்த மாணவி:


இதுகுறித்து, தமிழிசை நேற்று, சென்னையில் அளித்த பேட்டி: நான் மருத்துவ படிப்பில் சேர்ந்தபோது, எம்.ஜி.ஆர்., தான் முதல்வராக இருந்தார். அப்போது, நேர்முக தேர்வு மட்டுமே அமலில் இருந்தது. நான் எந்த தேர்விலும், 'அரியர்ஸ்' வைக்காத, மாணவியாக இருந்தவள்; வெளிநாடுகளிலும், தகுதியோடு தான் படித்தேன்.


நாகரிகமற்ற வார்த்தை:

நான், மருத்துவ படிப்பில் சேரும்போது, கருணாநிதி, பதவியில் இல்லை. அதனால், இதை கொச்சைப்படுத்த வேண்டாம். இதுகுறித்து, ஸ்டாலின் கூறியது நாகரிகமற்ற வார்த்தை. 'தமிழ், தமிழ்...' என முழங்கும், தி.மு.க., பிரமுகர்களின், வீட்டு குழந்தைகளில் எத்தனை பேர், தமிழ் படிக்கின்றனர் என, கூற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (111)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nanbaenda - chennai,இந்தியா
14-செப்-201719:53:13 IST Report Abuse
nanbaenda ஒரு வாதத்துக்கு அதை உண்மை என்று வைத்து கொண்டாலும் கருணாநிதி செய்தது தவறுதான். மருத்துவ சீட் என்பது அவரின் குடும்ப சொத்தா, சிபாரிசில் அள்ளி விடுவதற்கு.
Rate this:
Share this comment
Cancel
சிவ.இளங்கோவன் . - Kuwait ,குவைத்
14-செப்-201719:46:10 IST Report Abuse
சிவ.இளங்கோவன் . முதலில் டுமீலிசை சான்றிதழ்களை சரிபார்க்கவேண்டும் ...அல்லது இவருக்கு மருத்துவ தகுதித்தேர்வு மீண்டும் வைத்து பின்னர் தீர்ப்பு வழங்கலாம் ...இவர் கடந்தவாரம் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ...ஒரு பிரச வலி உடைய பெண்ணை வேனில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன் ...நல்ல வேலை நான் அவருக்கு சிகிச்சை தரவில்லை நான் அவருக்கு மருத்துவம் பார்த்திருந்தால் அவர் மேலே போயிருப்பார்னு அவரே வாக்குமூலம் கொடுத்திருந்தார் ..
Rate this:
Share this comment
Cancel
Vasanth Saminathan - Trivandrum,இந்தியா
14-செப்-201719:16:50 IST Report Abuse
Vasanth Saminathan அடேங்கப்பா இப்போதும் அந்த 800 மார்க் எடுத்தாலும் மருத்துவம் படிக்கக்கூடிய "ஸ்பெஷல் நேர்முக தேர்வை" மட்டுமே வைத்து அனிதாக்களை டாக்டர் படிப்புக்கு தேர்வு செய்யலாமே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை