கிராமத்து குழந்தைகள் படித்து விடக்கூடாதா?:தமிழிசை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கிராமத்து குழந்தைகள் படித்து விடக்கூடாதா?:தமிழிசை

Added : செப் 14, 2017 | கருத்துகள் (69)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தமிழிசை சவுந்தரராஜன்,thamilisai Sundararajan,நவோதயா பள்ளி,  Navodaya School,டுவிட்டர்,twitter,  நீட் தேர்வு, Neet Exam, மாணவர்கள் ,Students, சென்னை, Chennai, தமிழகம்,Tamilnadu,  தமிழக பா.ஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ,Tamil Nadu BJP leader Tamilisai Soundararajan, மத்திய அரசு, Central Government, மருத்துவ கல்லூரி,  Medical College,

சென்னை : தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் அமைக்க அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவது தொடர்பாக தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் டுவிட்டரில் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், கிராமத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மாணவர்கள் 40 சதவீத அளவுக்கு மேல் அனைத்தும் இலவசம். உறைவிடம், உணவு உடை உட்பட. அப்படி இருக்கையில் திருமாவளவன் எதிர்ப்பது ஏன்? நவோதயா பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம். 11 ,12 வகுப்புகளில் விருப்ப மொழியாக தமிழ்,இந்தி, ஆங்கிலம் உள்ளது. இதில் எங்கே திணிப்பு?

மத்திய அரசு ரூ. 20 கோடி உதவி வழங்கும். நவோதயாவில் நீட் எழுதிய 14,183 பேரில் 11,875 பேர் வெற்றி பெற்று மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். அரசு பள்ளியில் படித்தவர்களில் 5 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். நவோதயா பள்ளிகளை தடுப்பது தமிழகத்தில் அரசியல் வாதிகளின் குழந்தைகளுக்கு இணையாக கிராமத்து குழந்தைகள் படித்து விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தினால் தானா? இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.கிராமத்து குழந்தைகள் படிக்க கூடாதா?: தமிழிசை

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arachi - Chennai,இந்தியா
15-செப்-201702:03:23 IST Report Abuse
Arachi சில விஷயங்கள் சில ஜென்மங்களுக்கு புரியாது. நீங்க ஏன் இரு மொழி கொள்கையாய் கொண்டு வரக்கூடாது?
Rate this:
Share this comment
Cancel
Raman - Lemuria,இந்தியா
14-செப்-201719:14:40 IST Report Abuse
Raman கடந்த பத்து வருடங்களில் , வருடா வருடம் தமிழக அரசு பள்ளியில் படித்தவர்கள் முப்பது பேர் மட்டும் டாக்டர் சீட் வாங்கி வந்து இருக்கிறார்கள் . மூன்றாயிரம் சீட்டில் வெறும் முப்பது என்பது மிகவும் குரைந்த எண்ணிக்கை . இதை பற்றி யாரும் பேசுவது இல்லை . நீட் தேர்வை நீக்கினாலும் தமிழக அரசு கல்வி பெற்று ஏழைகள் சீட் வாங்க முடியாது என்பது தெளிவாக தெரிந்தாலும் , அரை குறை அறிவுடன் எதிர்க்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-செப்-201719:03:13 IST Report Abuse
Srinivasan Kannaiya தனியார் பள்ளிகளை மூடினால்தான் ..... அரசியல் வாதிகள் இதில் மூக்கை நுழைக்க மாட்டார்கள்.. தனியார் பள்ளிகளை நடுத்துவது யார்.... ஒன்று அரசியல்வாதிகள் அல்லது அவருடைய பினாமிகள்...
Rate this:
Share this comment
Cancel
14-செப்-201718:34:10 IST Report Abuse
Arivukkarasu when dmk dissapears then only tn will get improved.
Rate this:
Share this comment
Cancel
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
14-செப்-201718:07:23 IST Report Abuse
Barathan கிராமத்து மாணவர்கள் MBBS படித்துவிடக்கூடாது என்பதற்காகத்தானே NEET என்று எக்ஸாமை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
14-செப்-201718:02:39 IST Report Abuse
மலரின் மகள் சி எம் சியில் அட்மிஷனை நிறுத்தி விட்டார்களாம். யாருக்கும் பாடம் சொல்லி தரப்போவதில்லை என்றும் பேச்சு. அதுபோலவே ஆந்திர பக்கம் பல்வேறு கல்லூரிகள் இழுத்து மூடுவதாக அறிவித்து விட்டனவாம்.
Rate this:
Share this comment
Cancel
rajarajan - bangalore,இந்தியா
14-செப்-201717:17:01 IST Report Abuse
rajarajan நவோதயா பள்ளிகளில் படிக்கும் ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு வருடத்திற்கு 80000 ரூபாய் வரை மத்திய அரசு செலவு செய்கிறது. ஆனால் மாநில அரசு பள்ளிகளில் படிக்கும் ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு வருடத்திற்கு 5000 ரூபாய் கூட செலவு செய்ய மத்திய அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்குவதில்லை. ஒவ்வொரு வருடமும் பள்ளி கல்விக்கும் சுகாதாரத்துறைக்கும் பட்ஜெட்டில் ஒதுக்கும் நிதியை குறைத்துக் கொண்டேதான் போகிறது மத்திய பாஜக அரசு. இதை கூட்ட சொல்லுங்கள் மேடம்.
Rate this:
Share this comment
sivan - Palani,இந்தியா
16-செப்-201700:16:08 IST Report Abuse
sivan எதற்கு கூட்டணும்? மத்திய அரசின் கோவமே தமிழகத்துக்கு கொடுக்கப் பட்ட எந்த நல திட்ட உதவிகளும் முறையாக மக்களை சென்றடைய வில்லை என்பதுதான் வளர்மதி போன்றோரெல்லாம் பாடத்திட்ட குழு தலைவராம் என் ஒரு நேர்மையான அதிகாரி கிடைக்கவில்லையா/ .. பதினைந்து வருடங்களாக போயசுக்கு கட்டிங் / மன்னர் குடிக்கு கமிஷன் / அமைச்சர்களுக்கு லஞ்சம் என்று தமிழகமே வீணாகிப் போனது சுகாதாரத்துறைக்கு ஒதுக்கிய பணம் எப்படி விஜய பாசகரால் உபயோகப் படுத்தப் பட்டது என்பது ஊர் அறிந்த ரகசியம் அப்படி இருக்க மத்திய அரசு எப்படி தமிழகத்திற்கு பணம் தரும்? ஆந்திரா சந்திர பாபு கேட்டால் மோடி உடனே செய்வார். நிதிஷ் கேட்டால் உடனே செய்வார் ஏனென்றால் அவர்கள் மக்களுக்காக பணி ஆற்றுகிறார்கள் இங்கு அப்படியா?...
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
14-செப்-201717:08:25 IST Report Abuse
தமிழர்நீதி இருக்கும் பள்ளிக்கூடத்தை தரம் உயர்த்தாமல் 30 ஏக்கர் நிலத்தில் இன்னும் 5 ஆண்டுகள் கட்டுமான வேலை முடித்து காட்டும் காவி கூடங்கள் கூடாது என்கிறது தமிழகம் . இருக்கும் பள்ளிகளில் ஆசிரியர்கள் ,கழிவறை ,கரும்பலகை ,குடிநீர் கொடுங்கள் முதலில் அப்புறம் கல்வி என்ற பேரில் அமையவிருக்கும் காவி கூடம்களை பற்றி யோசிப்போம் .
Rate this:
Share this comment
Cancel
vns - Delhi,இந்தியா
14-செப்-201716:03:05 IST Report Abuse
vns மாணாக்கர்கள் படிக்கக்கூடாது என்று கூறும் மனிதர்கள் தமிழகத்தில் மட்டும் தான் இருப்பர். இன்றைய மாணவன் படிக்கவில்லையானால் நாளைய தமிழகம் இன்னமும் இருண்ட தமிழகமாகவே இருக்கும். மாணாக்கர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் படிப்பு சார்ந்த காரியங்களில் செலவிடவில்லை என்றால் அவர்களுக்கு நாளைய உலகை நோக்கும் திராணி இருக்காது. அரசியல் வாதிகளே மாணவர்களை படிக்க விடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Saravanan - Chennai,இந்தியா
14-செப்-201715:39:28 IST Report Abuse
Saravanan நவோதய பள்ளியில் ஹிந்தி கட்டாயம் இல்லை என்று சொல்வீர்களா?
Rate this:
Share this comment
nanbaenda - chennai,இந்தியா
14-செப்-201719:57:24 IST Report Abuse
nanbaendaஅதை படிப்பவர்கள் முடிவு செய்யட்டும். இந்த அரசியல்வாதிகள் யார் அதை முடிவு செய்ய. வேண்டும் என்றால் வேறு எந்த தேர்தல் வாக்குறுதியையும் கொடுக்காமல் வெறும் ஹிந்தி திணிப்பை மட்டும்எ திர்ப்போம் என்று ஒரு வாக்குறுதியை மட்டும் கொடுத்துவிட்டு இவர்கள் ஆட்சிக்கு வந்தால் இவர்கள் கூறுவதை ஒப்பு கொள்ளலாம்....
Rate this:
Share this comment
Raman - Lemuria,இந்தியா
14-செப்-201720:14:35 IST Report Abuse
Ramanதனியார் பள்ளியில் பணக்காரர்கள் படிக்க முடியாது என்று நீங்கள் சொல்வீரா ? ஏழைகள் மட்டும் அப்படியே இருக்க வேண்டுமா...
Rate this:
Share this comment
vadivelu - chennai,இந்தியா
14-செப்-201720:16:15 IST Report Abuse
vadiveluகட்டாயம் இல்லை என்றுதானே சொல்கிறார்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை