சிலை கடத்தல் டிஎஸ்பி காதர் பாட்ஷா கும்பகோணத்தில் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிலை கடத்தல் டிஎஸ்பி காதர் பாட்ஷா கும்பகோணத்தில் கைது

Added : செப் 14, 2017 | கருத்துகள் (77)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சிலை கடத்தல்,Statue kidnapping, டிஎஸ்பி காதர்பாட்ஷா,DSP kather Bashah பொன்.மாணிக்கவேல், Pon Manikavel,கைது, Arrested, கும்பகோணம்,Kumbakonam,  திருச்சி மத்திய சிறை, Trichy Central Jail, சென்னை ஐகோர்ட், Chennai High Court,

கும்பகோணம்: சிலை கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த டிஎஸ்பி காதர் பாட்ஷாவை பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் கும்பகோணத்தில் கைது செய்தனர்.


தலைமறைவு:

விருதுநகர், அருப்புக்கோட்டை தாலுகா, ஆலடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த, ஆரோக்கியராஜ் என்பவரிடம், கோவில்களில் இருந்து திருடப்பட்ட இரண்டு பஞ்ச லோக சிலைகள் இருந்தன. வெளிநாட்டைச் சேர்ந்தவருக்கு, அவற்றை விற்க முயற்சித்தார். இதையறிந்த இரண்டு போலீசார், சிலைகளை கைப்பற்றி, உயர் போலீஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அந்த சிலைகளை, 15 லட்சம் ரூபாய்க்கு, கடத்தல்காரரிடமே போலீஸ் அதிகாரி காதர் பாட்ஷா விற்று விட்டதாக புகார் எழுந்தது. அவர் மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது குறித்து சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து திருவள்ளூர் டிஎஸ்பியாக இருந்த காதர் பாட்ஷா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் தலைமறைவானார். அவருக்கு உடந்தையாக இருந்த சிறப்பு எஸ்ஐ சுப்புராஜ் கைது செய்யப்பட்டார்.


திருச்சி சிறையில்:

இந்நிலையில், கும்பகோணத்தில் தலைமறைவாக இருந்த காதர் பாட்ஷாவை பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் கைது செய்து செய்தனர். தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்திய பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.சிலை கடத்தல்: டி.எஸ்.பி. காதர் பாட்ஷா கைது

Advertisement
வாசகர் கருத்து (77)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adalarasan - chennai,இந்தியா
14-செப்-201723:11:01 IST Report Abuse
adalarasan மிகவும் சிறு திருட்டுகளுக்கு உள்ளே போட்டு முட்டிக்கு முட்டி தட்டுவார்கள் என்று கேள்விப்பட்டு உள்ளேன்" இந்த மாதிரி கடவுள் சிலையை திருடிய அதிகாரிக்கு....??
Rate this:
Share this comment
Cancel
Susil - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-செப்-201721:18:45 IST Report Abuse
Susil எவனா எந்த மதமா இருந்தா என்ன , திருடனிடம் போய் சாவியை குடுத்திருக்காங்களே
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-செப்-201718:55:22 IST Report Abuse
Srinivasan Kannaiya காவல் துறையில் இருந்து கொண்டு அதை கேடயமாக பயன்படுத்தி தில்லுமுல்லு செய்யும் இவரை என்ன செய்வதாக உத்தேசம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை