ஆமதாபாத்தில் புல்லட் ரயில் திட்டம் துவக்கி வைப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஆமதாபாத்தில் புல்லட் ரயில் திட்டம் துவக்கி வைப்பு

Added : செப் 14, 2017 | கருத்துகள் (25)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
புல்லட் ரயில்,Bullet Train , ஆமதாபாத்,Ahmedabad,  மும்பை, Mumbai, ஜப்பான்,japan    ஷின்சோ அபே, shinzo abe, நரேந்திர மோடி,Narendra Modi, பியூஷ் கோயல், Puyish Goyal,பிரதமர் மோடி, Prime Minister Modi, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே , japan Prime Minister shinzo abe , ரயில்வே பட்ஜெட்,Railway Budget, பிரதமர்,Prime Minister,bullet train in india ,Narendra Modi shinzo abe,

ஆமதாபாத்: ஆமதாபாத் - மும்பை இடையே, அதிவேக, 'புல்லட்' ரயில் இயக்குவதற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் நாட்டி, திட்டத்தினை துவக்கி வைத்தனர்.மத்தியில், பிரதமர் மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணிஆட்சி அமைந்த பின், தாக்கல் செய்யப்பட்ட, முதல் ரயில்வே பட்ஜெட்டில், 'நாட்டில், அதிவேக புல்லட் ரயில் இயக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது. அதில், குஜராத் மாநிலம், ஆமதாபாத்திலிருந்து, மஹாராஷ்டிர மாநிலம், மும்பை வரை, முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இத்திட்டம், ஜப்பானின் கடனுதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளது. ஒரு லட்சத்து, 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதில், 65 சதவீத தொகையை, 0.1 சதவீத வட்டியில், ஜப்பான் வழங்குகிறது.இதன்படி, ஆமதாபாத் நகரில் புல்லட் ரயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் அடிக்கல்லை நாட்டினர். விழாவில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


320 கி.மீ., வேகத்தில்:

* ஆமதாபாத் - மும்பை இடையே, 508 கி.மீ., துாரத்துக்கு இயக்கப்பட உள்ள புல்லட் ரயில், மணிக்கு, 320 கி.மீ., வேகத்தில் செல்லும்; இந்த வேகம் மணிக்கு, 350 கி.மீ., வரை அதிகரிக்கப்படும்* இந்த ரயில், சபர்மதி, வதோதரா உட்பட, 12 ரயில்வே ஸ்டேஷன்களில் நின்றுசெல்லும்* மொத்த வழித் தடத்தில், 92 சதவீத துாரம், மேம்பாலத்தில் புல்லட் ரயில் பயணிக்கும்.6 சதவீதம் துாரம், சுரங்கப்பாதையாக இருக்கும். மீதமுள்ள, 2 சதவீத துாரம், தரையில் பயணிக்கும்* 21 கி.மீ., துார சுரங்கப்பாதையில், 7 கி.மீ., துாரம், கடலுக்கு அடியில் அமைகிறது• இந்த திட்டத்தை ஐந்து ஆண்டுகளில் முடிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
15-செப்-201702:21:27 IST Report Abuse
Mani . V ஆக்கப்பூர்வமான திட்டங்கள் அனைத்தும் - குஜராத்துக்கு. அழிவுப்பூர்வமான திட்டங்கள் அனைத்தும் - தமிழகத்திற்கு. (நடத்துங்க ராஜா, நடத்துங்க)
Rate this:
Share this comment
Cancel
christ - chennai,இந்தியா
14-செப்-201720:12:36 IST Report Abuse
christ ஏற்கனவே ஓடிக்கொண்டு இருக்கும் ரயில்களில் டிக்கெட் அன்றய தேதியில் பயணம் என்றாலும் படுக்கை வசதியுடன் தாராளமாக கிடைக்கிறதா ? அப்படியே கிடைத்தாலும் அவற்றில் தட்கல் ,பிரிமியர் ,சுவேதா என பெயர்களை போட்டு கட்டண கொள்ளையடு மக்களை ஏமாற்றுகிறார்கள். பயணிகளின் தேவைக்கேற்ப சாதாரண கட்டணத்தோடு ரயில்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தவில்லை பல இடங்களில் இரட்டை பாதை இல்லாமல் ரயில்கள் சரியான நேரத்துக்கு செல்லமுடியாமல் ஓடிக்கொண்டு இருக்கிறது .ஏழைகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் நமது ரயில் சேவையில் பல குறைகளை வைத்துக்கொண்டு வசதி படைத்தவர்களுக்காக புல்லட் ரயில்களை ஏற்படுத்துவது சற்று நெருடலாக உள்ளது .
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
14-செப்-201717:15:55 IST Report Abuse
ரத்தினம் திட்டம் தீட்டும் அதிகாரிகளே, 500 கி மீ க்கு 12 ஸ்டாப் , 50 கி மீ க்கு ஒரு ஸ்டாப். . இதுக்கு எதுக்கு புல்லெட் ரயில்.. எங்க ஊர் பக்கம் 20 வருடங்களாக ஒரு ரயில் பாதையை அகலப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். ( மதுரை - ராஜபாளையம் -செங்கோட்டை- கொல்லம்) . எல்லாம் மலையாளத்துக்காரனும் , வடக்கத்திக்காரனும் , தமிழ்நாட்டை அம்போன்னு விட்டுட்டாங்க.. இங்க இருக்கிற MP களும் மிக்ஸர் சாப்பிடத்தான் லாயக்கு.
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
14-செப்-201716:02:19 IST Report Abuse
தமிழர்நீதி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு வரி 46 ரூ. GST வரி 100 ரூ க்கு 28 ரூ . தேசம் பூரா வரி போட்டு வாரிக்கொண்டு ரயில் விடுறார் மோடி வடநாட்டில் . மேலுக்கும் கீளுக்கும் ரயில் ஓடும் . இருக்கும் ரயில் எல்லாம் கவுழுது. இதுல இன்னொரு ரயில் வருது ...செலவுதான் எங்கோ போய் நிற்குது . மோடி சுற்றுலா தவிர்த்து இதுக்கெல்லாம் உதவுவார் . அதுசரி இந்த் ரயில் வந்தால் ஆக்சிசன் இல்லாமல் மருத்துவமனையில் இனி சிசுக்கள் மரணம் தவிர்க்கபடும்மா.
Rate this:
Share this comment
Cancel
14-செப்-201715:33:40 IST Report Abuse
எப்போதும் வென்றான் டிக்கெட் விலை Flight டிக்கெட்டை விட அதிகம் வைப்பார்கள்
Rate this:
Share this comment
Cancel
kum - paris,பிரான்ஸ்
14-செப்-201714:47:54 IST Report Abuse
kum அனைத்தும் பிஜேபி ஆளும் மாநிலத்துக்கே அல்வா மட்டும் தமிழனுக்கே
Rate this:
Share this comment
Indian - Bangalore,இந்தியா
14-செப்-201716:19:11 IST Report Abuse
Indianஅதாவது வெற்றி பெற வைத்த பிஜேபி மாநிலங்களுக்கு போகக்கூடாது, நாமம் சாத்திய தமிழகத்துக்கு எல்லாம் வேண்டுமா? மேலும் சென்னை-பெங்களூரு ஹை ஸ்பீட் train corridor பற்றி விஷயம் தெரியலாம் கூவுகிறீரே போராளி....
Rate this:
Share this comment
yaaro - chennai,இந்தியா
14-செப்-201716:44:51 IST Report Abuse
yaaroதானும் படுக்காம தள்ளியும் படுக்காம ..அவனாவது முன்னேறிட்டு போறான் ..நாம திராவிடம், சமூக நீதி, ஆரிய எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, நீட் எதிர்ப்பு, திட்டங்கள் எதிர்ப்பு, எதிர்ப்பு எதிர்ப்பு போராட்டம் போராட்டம் அப்படின்னே திரிவோம் . என்ன நம்பிக்கைல இப்படி ஒரு திட்டத்தை தமிழ்நாட்டிலே கொண்டு வர முடியும். இன்னைக்கு கையெழுத்து போட்டுட்டு சில வருஷம் கழிச்சு வெக்கமே இல்லாம அத எதிர்த்து போராடுவோம்...
Rate this:
Share this comment
Cancel
Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா
14-செப்-201714:00:17 IST Report Abuse
Vaideeswaran Subbarathinam A great step in transportation. The route chosen is a busy one. If it is completed within five years it will be a great achievement.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
14-செப்-201713:20:14 IST Report Abuse
மலரின் மகள் வாழ்த்துக்கள். இது போன்ற திட்டங்கள் நமக்கு எதிர்காலத்தை வளர்ச்சியை கருத்தில் கொண்டு நிச்சயம் தேவை. முப்பது ஆண்டுகளுக்கு முன்பே இதை ஆரம்பித்திருக்கலாம். புதிய மில்லேனியத்தில் அடி எடுத்து வைக்கும்போது இது போன்ற சேவைகள் கிடைத்திருந்திருக்க வேண்டும். அதிகாரிகளுக்கு இப்போதிருந்தே பயிற்சி அளிக்கப் படவேண்டும். அவர்கள் கூடுதல் சம்பளம் கேட்டு மக்கர் செய்வதற்கும் வாய்ப்பிருக்கிறது. திட்டத்தில் உள்ள குறைபாடாக ஐந்நூறு கி மீ தூரத்திற்கான பயணத்திற்கு ஒரு டஜன் நிறுத்தங்கள் தேவையா? இப்படித்தான் எல்லா திட்டங்களும் நீர்த்து போகச் செய்வார்கள். சென்னை மும்பை, டில்லி கல்கத்தா போன்ற நகரங்களுக்கு நான் ஸ்டாப் சேவையாக வழங்க வேண்டும். டுரோண்டோக்களை மனதில் வைத்து கொண்டு செயல் படவேண்டும். வாழ்த்துக்கள். இந்திய பிரமாண்டத்திலும் பிரமாண்டமாய் வளர முதல் படிக்கட்டாய் இந்த அடிக்கல்லை நான் பார்க்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
14-செப்-201713:17:12 IST Report Abuse
Barathan அடுத்து ஹைப்பர் ட்ரைனுக்கு அடிக்கல் நாட்டுவிழா பெங்களூரில் நடக்கும். அங்குதான் அடுத்தவருடம் அசெம்பிளி தேர்தல் வரப்போகுது.
Rate this:
Share this comment
Cancel
14-செப்-201713:16:41 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் மகிழ்ச்சி , மிக்க மகிழ்ச்சி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை