புல்லட் ரயில் திட்டத்தை துவக்குவதில் மகிழ்ச்சி:ஜப்பான் பிரதமர்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

புல்லட் ரயில் திட்டத்தை துவக்குவதில் மகிழ்ச்சி:ஜப்பான் பிரதமர்

Added : செப் 14, 2017 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஜப்பான் பிரதமர்,Japan Prime Minister,  ஷின்சோ அபே, Shinzo Abe, புல்லட் ரயில், BulletTrain, நரேந்திர மோடி,Narendra Modi,  மேக் இன் இந்தியா, make in india, ஆமதாபாத், Ahmedabad,

ஆமதாபாத்: புல்லட் ரயில் திட்டத்தினை துவக்கி வைத்த பிறகு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, 'நமஸ்கார்' எனக்கூறியபடி பேசுகையில், புல்லட் ரயில் திட்டத்தை துவக்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஜப்பான் புல்லட் ரயில் திட்டத்திற்கான பொன் விழா ஆண்டு இது. இந்த ஆண்டில் இந்திய புல்லட் ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா ,ஜப்பான் உறவில் முக்கியமான நாள் இது. உலக அரங்கில் இந்தியா, ஜப்பானுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. இந்தியா, ஜப்பான் நட்புறவின் அடையாளம் புல்லட் ரயில். இந்தியாவும், ஜப்பானும் இணைந்து செயல்பட்டால் முடியாதது ஒன்றுமில்லை.பிரதமர் மோடி மிகச்சிறந்த தொலைநோக்கு சிந்தனை கொண்டவ தலைவர் . இந்தியாவின் வளர்ச்சி கண் முன் தெரிகிறது. புது இந்தியா திட்டத்திற்கு ஜப்பான் ஒத்துழைப்பு வழங்கும். 'மேக் இன் இந்தியா' திட்டத்திற்கு ஜப்பான் தனது பங்களிப்பை செய்யும். மோடி புது இந்தியாவை உருவாக்கி வருகிறார்.100க்கும் மேற்பட்ட ஜப்பானிய பொறியாளர்கள் இந்தியா வந்து புல்லட் ரயில் திட்டத்திற்கு உதவி செய்வார்கள். இரு நாட்டு பொறியாளர்களும் இணைந்து திட்டத்தை வெற்றி பெற செய்வார்கள். நான் குஜராத்தை விரும்புகிறேன். இந்தியாவை விரும்புகிறேன். இந்தியாவுக்காக என்னால் முடிந்தவற்றை செய்வேன். பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் ஜப்பான் இணைந்து செயல்படும் இவ்வாறு அவர் பேசினார்.புல்லட் ரயில் திட்டம்: ஜப்பான் பிரதமர் மகிழ்ச்சி

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
periasamy - Doha,கத்தார்
14-செப்-201715:32:33 IST Report Abuse
periasamy குடல் கூழுக்களுக்கிது இடத்தில கொண்டபூவுக்கழுகிற கதைதான் விவசாயி வாழ்வாதாரத்திற்க்காக தினமும் போராடி தற்கொலை செய்துகொள்ளும் நாட்டில் யாருக்கு வேண்டும் இந்த புல்லட் ரயில்.
Rate this:
Share this comment
Cancel
venkatraman - chennai,இந்தியா
14-செப்-201713:54:01 IST Report Abuse
venkatraman we need to link rivers or overflow of rivers during flood time. That will be the milestone we achieve and we can avoid yearly monetary losses and calamities.Bullet train will can not be considered as a achivement
Rate this:
Share this comment
Cancel
MaRan - chennai,இந்தியா
14-செப்-201712:22:15 IST Report Abuse
MaRan ஜப்பான் புல்லட் ரயில் திட்டத்திற்கான பொன் விழா ஆண்டு இது. இந்த ஆண்டில் இந்திய புல்லட் ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது
Rate this:
Share this comment
Cancel
வெற்றி வேந்தன் - Vellore,இந்தியா
14-செப்-201711:02:33 IST Report Abuse
வெற்றி வேந்தன் இரண்டாவது உலக போரில் ஜப்பான் தன்முட்டாள்தனத்தால் மரண அடி வாங்கி அணு ஆயுதத்தின் பயங்கரத்தை முதல் முதலாக உலகம் உணரச்செய்து, தன் புத்திசாலித்தனத்தால் பொருளாதாரத்தில் உலகத்தில் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு உயர்ந்துள்ளது. சில நாடுகள் எவ்வளவு பட்டாலும் திருந்தாமல் மதவெறியில் உலகத்தை ஆளலாம் என்று கனவு காண்கிறது. காலம் அதனை மாற்றும்.
Rate this:
Share this comment
Cancel
Naam thamilar - perth,ஆஸ்திரேலியா
14-செப்-201711:00:49 IST Report Abuse
Naam thamilar Bullet train பிரதமர் மகிழ்ச்சி. பெட்ரோல் விலை மக்கள் அதிர்ச்சி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை