இந்தியா வளர்ச்சி பெற புல்லட் ரயில் திட்டம் உதவும்: மோடி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்தியா வளர்ச்சி பெற புல்லட் ரயில் திட்டம் உதவும்: மோடி

Added : செப் 14, 2017 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 பிரதமர் மோடி,prime minister modi, ஜப்பான்,japan, புல்லட் ரயில்,BulletTrain, ஷின்சோ அபே, Shinzo Abe, குஜராத்,Gujarat, மகாராஷ்டிரா,Maharashtra, ஜப்பான் பிரதமர் அபே, Japan Prime Minister Abe

ஆமதாபாத்: புல்லட் ரயில் திட்டம், குஜராத், மகாராஷ்டிரா மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியா வளர்ச்சி பெற உதவும் என பிரதமர் மோடி கூறினார்.புல்லட் ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய பின்னர் அவர் பேசியதாவது: ஜப்பான் பிரதமர் அபேவை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.ஜப்பானுக்கு இந்திய மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஜப்பான் மிகச்சிறந்த நாடு, இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடு. புல்லட் ரயில் சுற்றுசூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் செயல்படுத்தப்படும்.புல்லட் ரயில் புது இந்தியாவின் ஒரு அங்கம்.புதிய இந்தியாவின் எதிர்கால கூட்டணியில் ஜப்பானுக்கு நிச்சயம் இடமுண்டு.புது இந்தியாவின் வளர்ச்சிக்கு தோள் கொடுக்கும் ஜப்பானுக்கு பாராட்டுக்கள்.அதிநவீன தொழில்நுட்பத்தில் புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். நாட்டின் வளர்ச்சியில் போக்குவரத்திற்கு முக்கிய பங்கு உள்ளது. இந்தியாவின் புல்லட் ரயில் திட்டத்தில் ஜப்பான் பிரதமர் அபே தனிப்பட்ட ஆர்வம் கொண்டிருந்தார்.அதிவேக போக்குவரத்து வசதிகள் தூரங்களை குறைக்கின்றன. பொருளாதாரத்தை வளர்க்கின்றன. 1964ல் புல்லட் ரயில் துவங்கப்பட்ட பிறகு ஜப்பானின் வளர்ச்சி அதிவேகமானது.சர்வதேச நாடுகளுடன் வளர்ச்சியில் போட்டி போட புல்லட் ரயில் முக்கியமானது.உற்பத்தி துறையின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டே புல்லட் ரயில் திட்டம் துவக்கப்பட்டது. 0.1 சதவீத வட்டியில் 88 ஆயிரம் கோடி ரூபாயை ஜப்பான் கடனாக வழங்குகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.இந்தியா வளர்ச்சிக்கு புல்லட் ரயில் திட்டம் உதவும்: மோடி

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatesh - bangalore,இந்தியா
14-செப்-201712:15:55 IST Report Abuse
Venkatesh எப்படி உதவும்னு கொஞ்சம் தெளிவா தான் சொல்லுங்க திரு நாடோடி .
Rate this:
Share this comment
Cancel
வெற்றி வேந்தன் - Vellore,இந்தியா
14-செப்-201711:34:39 IST Report Abuse
வெற்றி வேந்தன் நாட்டின் முன்னேற்றத்திற்கு தேவையான தொழில் நுட்பத்தில் நாம் என்று தன்னிறைவு அடைகிறோமோ அன்றே நாம் வலிமையுடையவர்களாக கருதப்படுவோம். நம்மில் உள்ள திறமையாளர்களை அடையாளம் காணுவோம், அவர்கள் மூலம் நாட்டை வலிமையாக்குவோம். நாம் திறமையில் உலகின் எந்த நாட்டிற்கும் குறைந்தவர்கள் அல்ல, உணர்வோம் உயர்வோம்.
Rate this:
Share this comment
Cancel
karthi - chennai,இந்தியா
14-செப்-201711:09:58 IST Report Abuse
karthi தமிழ்நாட்டிலும் புல்லேட் ரயில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக, சென்னை- கோவை, சென்னை-மதுரை மற்றும் சென்னை-பெங்களூரு ஆகிய வழிதடங்களில் புல்லேட் ரயில் அறிமுகப்படுத்த, தமிழ்நாட்டை சேர்ந்த மத்திய மந்திரிகள், MP க்கள், முதலமைச்சர் ஆகியோர் முயற்சிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை