பூச்சிகளின் பிரியர் பூச்சி வெங்கட்...| Dinamalar

பூச்சிகளின் பிரியர் பூச்சி வெங்கட்...

Updated : செப் 15, 2017 | Added : செப் 15, 2017 | கருத்துகள் (2)
Advertisement

பூச்சிகளின் பிரியர் பூச்சி வெங்கட்...

பூச்சி வெங்கட்
பூச்சி இனங்களை எடுப்பதில் நிபுணத்துவம் பெற்றவர் என்று இந்தியாவில் அறியப்படும் புகைப்படக்கலைஞர்களில் எஸ்.வெங்கட்ராமனும் ஒருவர்.கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பூச்சிகளை மட்டுமே படம் எடுத்து வருவதால் இவர் பூச்சி வெங்கட் என்றே அறியப்படுகிறார்.

பூச்சிகள் என்பது பயப்படுவதற்காக படைக்கப்பட்டவையல்ல.பூமியில் மனிதர்கள் தோன்றுவதற்கு முன்பாக தோன்றியவை அவை.அவற்றின் விநோதமான வடிவங்களும் ரீங்காரமும் நிறமும் தன்மையும் ஊர்ந்து செல்லும் விதமும் நம்மை பயமுறுத்தலாம் அல்லது நேசிக்கச் செய்யலாம்.
எப்படி என்றாலும் நாம் உயிருடன் இருப்பதற்கு இந்த பூச்சிகள்தான் காரணம்.இவைகளின் மகரந்தே சேர்க்கை என்பது இல்லாவிட்டால் தாவரங்களின் வளர்ச்சி என்பதே இல்லாத ஒன்றாகும்.குப்பை கூளத்தை உட்கொள்வது,சிதைந்த பொருட்களை மக்கி உருச்சிதைப்பது என பூமிப்பந்தை இயற்கையாக பாதுகாப்பாக வைத்திருப்பது பூச்சிகள்தான்.

ஆனால் அவைகளை தொல்லையாகக்கருதி பூச்சி கொல்லிகள் உபயோகித்து அழிப்பதில் மனிதர்கள் தீவிரமாக இருக்கின்றனர்.இது தவறு என்பதை உணர்த்துவதற்காகவும் அவைகளின் உண்மை இயல்புகளை உலகிற்கு தெரியப்படுத்தவுமே பூச்சிகளை படம் எடுக்கும் புகைப்படக்கலைஞனாக மாறினேன் என்கிறார் பூச்சி வெங்கட்.
இவர் எடுத்ததில் தேர்வு செய்யப்பட்ட படங்களைக் கொண்டு பூச்சிகள் என்ற தலைப்பில் அருமையான புத்தக வௌியீட்டு விழாவும் புகைப்படக் கண்காட்சியும் சென்னையில் நடைபெற்றது.

பூச்சிவெங்கட்டிட்டிடம் பேசுவதற்காக எண்:9962523204.
-எல்.முருகராஜ்


murugaraj@dinamalar.in

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
30-அக்-201715:21:10 IST Report Abuse
தமிழ்வேல் வாழ்க உங்கள் நிபுணத்துவம். (நல்லாவே பூச்சி காட்றாரு :-)
Rate this:
Share this comment
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
25-அக்-201711:54:29 IST Report Abuse
Ravichandran சிறந்த மனிதர் வித்தியாசமான கோணத்தில் உண்மையா சிந்தித்தவர், இத போன்ற அறிவாளிகள் வெளிநாடுகளில் நிறைய, நாம் நம் நாட்டில் தோன்றும் இது போன்ற அறிவாளிகள் பலரையும் அடையாளம் காணாமல் விட்டு விடுகிறோம். பூச்சி வெங்கட் அய்யாவிற்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை