அமராவதி ஆற்றுப்பாலம் தடுப்புச்சுவரில் உடைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அமராவதி ஆற்றுப்பாலம் தடுப்புச்சுவரில் உடைப்பு

Added : செப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: கரூர் அருகே, அமராவதி ஆற்றுப்பாலத்தில், தடுப்புச்சுவர் மற்றும் பிளாட்பாரம் சேதம் அடைந்துள்ளதால், பாலத்தில் செல்பவர்கள் பீதி அடைகின்றனர்.
கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், ஆண்டாங்கோவில் அருகே, அமராவதி ஆற்றின் குறுக்கே, இரண்டு உயர்மட்ட பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இதன் வழியாக நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதைத் தவிர, சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் இருசக்கர வாகனங்களில், உயர் மட்ட பாலத்தில் செல்கின்றனர். மேலும், காலை, மாலை நேரங்களில், பாலம் பிளாட்பாரத்தில் மக்கள் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். இந்நிலையில், பாலம் பிளாட்பாரம் உடைந்து சேதம் அடைந்துள்ளது. பாலத்தின் தடுப்புச் சுவரும் உடைந்துள்ளது. இதனால், வாகனங்களில் செல்பவர்கள், நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் அச்சமடைந்துள்ளனர். அமராவதி ஆற்று உயர்மட்ட பாலத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை