மானாவாரி சாகுபடி பயிர்களை காப்பாற்ற கை கொடுத்த மழை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மானாவாரி சாகுபடி பயிர்களை காப்பாற்ற கை கொடுத்த மழை

Added : செப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளதால், மானாவாரி சாகுபடி பயிர்கள் தப்பின. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணராயபுரம் சுற்றுவட்டார கிராம, மானாவாரி நிலங்களில், எள், துவரை, சோளம், உளுந்து ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. களை எடுக்கப்பட்டு, மேல் உரமாக யூரியா போடப்பட்டுள்ளது. இந்நிலையில், வரகூர், வயலூர், சிவாயம், குழந்தைப்பட்டி, மத்திப்பட்டி முதலான பகுதிகளில், நேற்று மதியம் பரவலாக மழை பெய்தது. இதன் மூலம், மானாவாரி பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைத்துள்ளதாக, விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், எள், கடலை செடிகள் தற்போது பூக்கத் துவங்கியுள்ளன. தொடர்ந்து மழை பெய்தால் செடிகளில் அதிகமாக காய் பிடித்து, அதிக மகசூல் கிடைக்கும் என, விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை