குடியேறாத இலவச பட்டா ரத்து: மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குடியேறாத இலவச பட்டா ரத்து: மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

Added : செப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: குடியேறாத இலவச வீட்டு மனை பட்டாக்கள் ரத்து செய்யப்படும் என, கலெக்டர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், ரெங்கநாதபுரம் (தெற்கு) கிராமத்தில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம், வீடற்ற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. வழங்கிய ஓராண்டுக்குள், பட்டா பெற்ற நபர் வீடு கட்டி குடியேற வேண்டும், குடியேறாத நிலையில், பட்டா ரத்து செய்யப்படும் என, அரசு விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கிராமத்தில் பட்டா வழங்கப்பட்ட நிலத்தில், இதுவரை யாரும் குடியேறவில்லை. எனவே, 15 நாட்களுக்குள் பட்டா பெற்றவர்கள் அவரவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மனையில், குடியேற வேணடும். குடியேறாத வீட்டுமனை பட்டா ரத்து செய்யப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை