மருத்துவமனை மேலாளர் கிணற்றில் சடலமாக மீட்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மருத்துவமனை மேலாளர் கிணற்றில் சடலமாக மீட்பு

Added : செப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: தனியார் மருத்துவமனை மேலாளர், கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். அவர், தற்கொலை செய்து கொண்டாரா, கொலை செய்யப்பட்டாரா என, போலீசார் விசாரிக்கின்றனர். நாமக்கல் அடுத்த, நல்லிகவுண்டன்புதூரை சேர்ந்தவர் மணி. அவரது விவசாய கிணற்றில், நேற்று முன்தினம் இரவு, அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதந்தது. இது குறித்து, அப்பகுதியை சேர்ந்தவர்கள், நல்லிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு, விசாரணை நடத்தினர். அதில், நாமக்கல்லை சேர்ந்த கணேசன் மகன் விஜயகுமார், 34, என்பதும், அவர், தனியார் மருத்துவமனையில் மேலாளராக பணியாற்றியதும் தெரிய வந்தது. மேலும், அவரது உடலில் காயம் இருப்பதால், விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது கொலை செய்யப்பட்டாரா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை