சுகாதார நிலையத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுகாதார நிலையத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை

Added : செப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராசிபுரம்: போடிநாயக்கன்பட்டியில், பூட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையத்தை திறக்க, கோரிக்கை எழுந்துள்ளது. ராசிபுரம் ஒன்றியம், போடிநாயக்கன்பட்டி மற்றும் சுற்றியுள்ள மக்கள், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்ல, ஐந்து கி.மீ., தொலைவில் உள்ள ராசிபுரத்திற்கும், மூன்று கி.மீ., தொலைவில் உள்ள, சிங்களாந்தபுரத்திற்கும் செல்ல வேண்டியிருந்தது. இதை கருத்தில் கொண்டு, பஞ்., ஐந்தாவது வார்டு, அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில், தமிழ்நாடு டேனிடா திட்டத்தில், துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டது. மருத்துவர், செவிலியர் பணிபுரிந்து வந்தனர். கர்ப்பிணிகளுக்கு பிரசவ முன் கவனிப்பு, உணவு வழங்குதல், பேறுகால பின் கவனிப்பு, தடுப்பூசி போடுதல், காய்ச்சலுக்கு சிகிச்சை, முதலுதவி போன்றவை அளிக்கப்பட்டன. இந்நிலையில், சுகாதார நிலையம், இரண்டு ஆண்டுகளாக பூட்டப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். துணை சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை