முன்விரோதத்தால் ஆத்திரம்: வீடு புகுந்து தாக்கியதில் 4 பேர் படுகாயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முன்விரோதத்தால் ஆத்திரம்: வீடு புகுந்து தாக்கியதில் 4 பேர் படுகாயம்

Added : செப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குமாரபாளையம்: முன்விரோதம் காரணமாக, வீடு புகுந்து தாக்கியதில், நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
குமாரபாளையம் அடுத்த, பல்லக்காபாளையம் ஊராட்சி, ஆயிகவுண்டம்பாளையத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் வேல்முருகன், 45; இவரது தம்பி பாஸ்கர், 42; மினி லாரி உரிமையாளர். இவர்கள், தங்கள் குடும்பத்துடன், நேற்று முன்தினம் காலை, அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த, 10க்கும் மேற்பட்டோர், அவர்களை வெளியே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, வேல்முருகன் குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். நேற்று மாலை, 3:00 மணியளவில், பாஸ்கர் வீடு புகுந்த சிலர், பாஸ்கர், அவரது மனைவி லதா, 34, வேல்முருகன் மனைவி பானுமதி, 34, வேல்முருகன் தாய் மாதம்மாள், 70, ஆகியோரை பலமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர்கள், குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, வேல்முருகன் கூறுகையில், ''முன் விரோதம் காரணமாக கோவிலுக்கு சென்ற எங்களை, ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக கூறி, வெளியே விரட்டினர். போலீசாரிடம் புகார் தெரிவித்ததால், மீண்டும் எங்களின் வீடு புகுந்து, தாக்கியவர்கள் மீது குமாரபாளையம் போலீசாரிடம் புகார் தந்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை