இன்று எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா: பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு| Dinamalar

இன்று எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா: பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

நாமக்கல்: 'இன்று, நாமக்கல்லில் நடக்கும், எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவில், அ.தி.மு.க., தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்' என, அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, எம்.பி., சுந்தரம், எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர், சந்திரசேகரன், சரஸ்வதி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அவர்கள் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு சார்பில், நாமக்கல் மாவட்டம், கருப்பட்டிபாளையத்தில், இன்று மாலை, எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. முதல்வர் பழனிசாமி, 382.94 கோடி ரூபாய் மதிப்பில், 32 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 332.25 கோடி ரூபாய் மதிப்பில், 36 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு, 29 ஆயிரத்து, 39 பயனாளிகளுக்கு, 188.01 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கி சிறப்புரையாற்றுகிறார். நாமக்கல் சட்டசபை தொகுதியில், நாமக்கல் நகராட்சியுடன் இணைக்கப்பட்ட, ஒன்பது ஊராட்சிகளுக்கும், 185 கோடி ரூபாயில், குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், 125 கோடி ரூபாய் மதிப்பிலான திருச்செங்கோடு - நாமக்கல், நான்கு வழிச்சாலை, 64 கோடி ரூபாய் மதிப்பில், கணவாய்ப்பட்டி - மோகனூர் வரை, விரிவாக்கம் செய்து முடிக்கப்பட்ட சாலைப்பணிகளை திறந்து வைக்கின்றனர். துணை முதல்வர் பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். அ.தி.மு.க., தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.