பயிர் காப்பீடு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தீர்மானம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பயிர் காப்பீடு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தீர்மானம்

Added : செப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மோகனூர்: பா.ஜ., மாவட்ட விவசாய அணி செயற்குழு கூட்டம், மோகனூர் அடுத்த, அணியாபுரத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். கடந்த, 2006ல் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு, உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். நாட்டு சோளம் அதிக விலைக்கு விற்பனையாவதால், விவசாயிகளுக்கு மானிய விலையில் விதை சோளம் வழங்க வேண்டும். ஆண்டகளூர்கேட்டில், பொது கழிப்பிடம் அமைக்க வேண்டும். காவிரி ஆற்றில் மணல் எடுப்பதை, தற்காலிகமாக நிறுத்த வேண்டும். நாமக்கல் மாவட்ட, குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, காவிரி ஆற்றில், கொந்தளம் - நொய்யல் இடையே தடுப்பணை கட்ட வேண்டும். ப.வேலூர் இடும்பன் குளத்தை தூர்வாரி, காவிரி ஆற்றில் இருந்து உபரி நீரை, மின் மோட்டார் பயன்படுத்தி, குளத்தில் நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை