பெருமாள் கோவிலில் சனி வார பெருவிழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெருமாள் கோவிலில் சனி வார பெருவிழா

Added : செப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மோகனூர்: கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிவார பெருவிழா, துவங்கியது. மோகனூர் காவிரி ஆற்றின் கரையில், கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, சுவாமி, பத்மாவதி தாயாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு, ஆண்டு தோறும், புரட்டாசி சனி வார பெருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு விழா, நேற்று துவங்கி, ஐந்து வாரம் நடக்கிறது. இதை முன்னிட்டு, புரட்டாசி சனிக்கிழமைகளில், காலை, விசேஷ அபி?ஷகம், அலங்கார ஆராதனை, மாலையில், கருடசேவை, திருக்கொடி ஏற்றுதல் நடக்கிறது. நேற்று புஷ்பங்கி அலங்காரம், 23ல், குருவாயூரப்பன்; 30ல், சந்தன காப்பு; அக்., 1ல், பெரிய திருவோணம்; அக்., 7ல், சிறப்பு அலங்காரம்; அக்., 14ல், சர்வாபரணம் அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளுகிறார். ஏற்பாடுகளை, செயல் அலுவலர் சாந்தி மற்றும் மக்கள் செய்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை