kalvipurachi -12 | பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி - 12| Dinamalar

சிறப்பு பகுதிகள்

பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி

பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி - 12

Updated : செப் 18, 2017 | Added : செப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி - 12

கல்வித் தரம் உயர வேண்டுமானால் கல்விச் சுதந்திரம் தேவை. இந்த சுதந்திரம் ஆசிரியர் களுக்கும் கல்வி நிறுவன நிர்வாகிகளுக்கும் வழங்க பட வேண்டும். இதன் அடிப்படையில் தான் பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்த, தகுதியான பள்ளிகளுக்கு தன்னாட்சி தருவது அவசியமாகிறது.

இதை வலியுறுத்தும் வகையில் உருவாக்கி உள்ள கருத்துருவை, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன், பாடத்திட்ட கலைத் திட்டக் குழு தலைவரும், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தருமான அனந்தகிருஷ்ணன் ஆகியோரிடம் தினமலர் நாளிதழின் வெளியீட்டாளர் ஆர்.லட்சுமிபதி வழங்கியிருந்தார். இந்த கருத்துரு குறித்து, கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், தங்கள் கருத்துக்களை, தினமலர் வெளியீட்டாளர், ஆர்.லட்சுமிபதியுடன் பகிர்ந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தினமலர் வாசகர்கள் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். அந்த கருத்துக்களையும் அவை தொடர்பான தினமலர் விளக்கத்தையும் இங்கே அளித்திருக்கிறோம்.


17. சு.பழனிராஜ், காஞ்சிபுரம். spalanirajamie@gmail.com


நம் தமிழகத்தில் கல்வித்தரம் உயர

1.ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து ஆசிரியர்களின் வருகை பதிவை (நகரம் மற்றும் கிராமம்) உறுதி செய்யவேண்டும் .
2.ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து வகுப்பு அறைகளிலும் ஞிஞிtதி கேமரா பொருத்த பட வேண்டும்.
3.மாதம் ஒரு முறை அனைத்து வகுப்புகளுக்கும் ஓரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர் வீதம் (வேறு பள்ளியில் இருந்து ) மாணவர்களின் கல்வித் தரத்தை சோதிக்க வேண்டும்,
4.அரசு வேலை வேண்டும் என்றால் அரசு ஊழியர்களின் அனைத்து பிள்ளைகளும் அரசு பள்ளிகளில் கட்டாயம் படிப்பதை உறுதி செய்ய வேண்டும் .
5.மூன்று வருடத்திற்கு ஒரு முறை பாட திட்டதை கட்டாயம் மாற்றி அமைக்கவேண்டும் .
6.பாடத்திட்டத்தில் 50% தியரியும் 50% செய்முறையும் கட்டாயம் இருக்க வேண்டும் .
7.தேர்வில் (Repeated questions) இல்லாமல் அனைத்து பாடத்தையும் புரிந்து படித்து எழுதும்படி தேர்வு முறை அமைய வேண்டும்.
8. 6 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கும் பொது தேர்வு முறை கொண்டு வரவேண்டும்
குறிப்பு: இவை அனைத்தும் பள்ளிகளுக்கு மட்டுமல்லாது கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் .
நம் தமிழகத்தில் கல்வித்தரம் உயர
1.ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து ஆசிரியர்களின் வருகை பதிவை (நகரம் மற்றும் கிராமம்) உறுதி செய்யவேண்டும் .
2.ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து வகுப்பு அறைகளிலும் ஞிஞிtதி கேமரா பொருத்த பட வேண்டும்.
3.மாதம் ஒரு முறை அனைத்து வகுப்புகளுக்கும் ஓரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர் வீதம் (வேறு பள்ளியில் இருந்து ) மாணவர்களின் கல்வித் தரத்தை சோதிக்க வேண்டும்,
4.அரசு வேலை வேண்டும் என்றால் அரசு ஊழியர்களின் அனைத்து பிள்ளைகளும் அரசு பள்ளிகளில் கட்டாயம் படிப்பதை உறுதி செய்ய வேண்டும் .
5.மூன்று வருடத்திற்கு ஒரு முறை பாட திட்டதை கட்டாயம் மாற்றி அமைக்கவேண்டும் .
6.பாடத்திட்டத்தில் 50% தியரியும் 50% செய்முறையும் கட்டாயம் இருக்க வேண்டும் .
7.தேர்வில் (கீஞுணீஞுச்tஞுஞீ ணுதஞுண்tடிணிணண்) இல்லாமல் அனைத்து பாடத்தையும் புரிந்து படித்து எழுதும்படி தேர்வு முறை அமைய வேண்டும்.
8. 6 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கும் பொது தேர்வு முறை கொண்டு வரவேண்டும்
குறிப்பு: இவை அனைத்தும் பள்ளிகளுக்கு மட்டுமல்லாது கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் .
தினமலர் விளக்கம்: பள்ளிகளில் கல்வித் தரம் உயர, தாங்கள் சொல்லியிருக்கின்ற கருத்துக்கள் உண்மையில் ஒரு பெரும் கல்விப் புரட்சி நிகழ வழிகாட்டிகளாக இருக்கின்றன. இங்கே, ஒரு கருத்தைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.
"எது எப்படி இருக்க வேண்டும்" என்ற நிலைக்கும், "அது இப்போது எப்படி இருக்கிறது" என்ற நிலைக்கும் உள்ள இடைவெளி மிகவும் கவனிக்கப்பட வேண்டியது. ஏனெனில் "எப்படி இருக்க வேண்டும்" என்ற நிலையை அடைய தேர்ந்தெடுக்கப்படும் பாதை, "அது எப்படி இப்பொழுது இருக்கிறது" என்ற நிலையுடன் நெருங்கிய தொடர்புடையது. இந்த சிந்தனை வழியில், தாங்கள் சுட்டிக் காட்டியிருக்கிற, அப்பழுக்கற்ற உன்னத நிலை அடைய பல வருடங்கள் ஆகலாம். தவிர, கல்வியுடன் தொடர்புடைய அத்தனை பேரும், ஆசிரியர்கள், மாணவர்கள், அரசு அதிகாரிகள், பெற்றோர்கள், - இவர்கள் எல்லோருக்கும் கல்வித் தரத்தில் மாற்றுக் கருத்து இருக்கக் கூடாது. இதை ஏன் சொல்கிறோம் என்றால், தாங்கள் வெளிப்படுத்தியிருக்கும் கல்வி தரவுயர்வில் அக்கறை எல்லோருக்கும் அமைய வேண்டும். அப்படி அமைய, தளராத முயற்சியும் நல்ல சிறந்த திட்டங்களும் இன்றியமையாதவை. சிறந்த உடனடியாக/ அன்று தேவைப்பட்ட திட்டம் தான் கல்லூரிகளில் தன்னாட்சி நின்று நிதானித்து நன்கு ஆராய்ந்த பிறகு சிறந்த கல்வியாளர்கள் கண்ட முடிவு; கல்லூரிகளின் தரம் உயர, ஆசிரியர்களுக்கும், நிர்வாகத்தினருக்கும், சுதந்திரம் வேண்டும்; அதாவது, தன்னாட்சி என்ற புரட்சியான - அன்று- இயங்குமுறையை மேற் கொண்டார்கள். கல்லூரிக்குத் தன்னாட்சி வழங்க பல சரியான நிபந்தனைகள், கட்டாயங்கள் உருவாக்கப் பட்டன. சரியான நேர்மையான மேற்பார்வையில் கல்லூரிக்குத் தன்னாட்சி வழங்கப்பட்டன. முன்பே சுட்டிக் காட்டியதைப்போல், கல்வித்தரம் என்னும் "தவத்தில்" அத்தனை பொறுப்பாளர்களும் கடமை உணர்வுடன் பணியாற்ற வேண்டும். இன்று, அப்படி பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஏதோவொரு சிலர் தவறுகளின் காரணத்தைக் கருத்தில் கொண்டு, பலருடைய நேர்மையான பணிகளை தவறாக எடை போட்டு ஒதுக்கி விடக்கூடாது. இந்தச் சிந்தனையின் பின்னணியால் தான், பள்ளிகளில் தன்னாட்சி என்ற கல்விப் புரட்சியைத் தினமலர் கையிலெடுத்தது. குறைகளைக் குறைக்க முற்படுவதும், நிறைகளை போற்றி ஊக்குவிப்பதும் அடிப்படை சமூக பொறுப்புணர்வு.
இந்த சமூக பொறுப்புணர்வுடன் தாங்கள் நல்ல கருத்துக்களைக் கூறியுள்ளீர்கள். தாங்கள் சுட்டிக் காட்டியுள்ள வழிகள் உண்மையில் தன்னாட்சிக்குரிய பால பாடங்கள். ஆசிரியர்களும் அரசு அதிகாரிகளும் இன்றைய சூழலில் பள்ளிகளில் தன்னாட்சி என்ற வழியைத் தேர்ந்தெடுத்து, நமது மாணவர்களின் நலனைப் பாதுகாத்து, வளமான வருங்காலத்திற்கு வழி வகுப்பார்கள் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். தாங்கள் கல்வித்தர உயர்வில் காட்டிய அக்கறையை நாம் மிகவும் மதிப்பதோடு, தங்கள் கருத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

தொடரும்

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X