ஒகேனக்கல்லில் அனுமதி அளித்தும் பரிசல் ஓட்டிகள் இயக்க மறுப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒகேனக்கல்லில் அனுமதி அளித்தும் பரிசல் ஓட்டிகள் இயக்க மறுப்பு

Added : செப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில், பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பரிசல் ஓட்டிகள், நேற்று பரிசல் இயக்க மறுத்து விட்டனர்.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக, கடந்த சில நாட்களாக, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, கடந்த, 15 நாட்களாக பரிசல் இயக்க, மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. இந்நிலையில், நேற்று காலை, 10:00 நிலவரப்படி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில், 7,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. முன்னதாக, ஆற்றில் பரிசல் இயக்குவது குறித்து, ஆர்.டி.ஓ., ராமமூர்த்தி, டி.எஸ்.பி., அன்புராஜ், பி.டி.ஓ., அன்பழகன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து, நேற்று சில கட்டுப்பாடுகளுடன் பரிசல்கள் இயக்க, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. பரிசல் துறையிலிருந்து, மாமரத்து கடவு வரை மட்டுமே பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தும், பரிசல் ஓட்டிகள் பரிசல்களை இயக்க மறுத்து விட்டனர்.


இதுகுறித்து பரிசல் ஓட்டிகள் கூறியதாவது: பரிசல் துறையிலிருந்து, தொம்பச்சிக்கல், ஐந்தருவி, பெரியபாணி, மணல் திட்டு உள்ளிட்ட பகுதிகளில் பரிசல் இயக்க அனுமதிக்க வேண்டும். லைப் ஜாக்கெட்டுகளை அதிகரிக்க வேண்டும். ஊட்டமலை பரிசல் துறையிலிருந்து பரிசல் இயக்க வேண்டும். இந்த கோரிக்கைகள் நிறைவேறிய பின், பரிசல்கள் இயக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து பென்னாகரம் பி.டி.ஓ., அன்பழகன் கூறுகையில், ''ஒகேனக்கல்லில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்தையடுத்து, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, பல்வேறு விதிமுறைகளை மாவட்ட நிர்வாகம் கடை பிடித்து வருகிறது. பரிசல் ஓட்டிகள் அவர்களுடைய கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். இதுகுறித்து, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை