சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரியில் எட்டு பேருக்கு அண்ணா பதக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரியில் எட்டு பேருக்கு அண்ணா பதக்கம்

Added : செப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: ஈரோடு டி.எஸ்.பி., உள்பட, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரியில், எட்டு பேருக்கு அண்ணா பதக்கத்துடன், சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக டி.ஜி.பி., ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: போலீசில், சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு, செப்., 15, அண்ணாதுரை பிறந்தநாள் முன்னிட்டு, பதக்கம் வழங்கப்படும். நடப்பாண்டு, ஈரோடு விஜிலென்ஸ் டி.எஸ்.பி., புஷ்பராஜூக்கு, பதக்கத்துடன், 10 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படுகிறது. இன்ஸ்பெக்டர்கள், சேலம், அஸ்தம்பட்டி - கண்ணன், கிருஷ்ணகிரி விஜிலென்ஸ் - முருகன், ஈரோடு, சத்தியமங்கலம், சிறப்பு அதிரடிப்படை - புகழ்மாறன் ஆகியோர் பதக்கம் பெற உள்ளனர். எஸ்.ஐ.,க்கள், தர்மபுரி, காரிமங்கலம் - இளவரசன், தர்மபுரி, நக்சலைட் ஒழிப்பு பிரிவு - சுந்தரம், சேலம் போலீஸ் பயிற்சி உதவி ஆய்வாளர் செல்வம், தலைமை காவலர்களில், சேலம், போலீஸ் பயிற்சி பள்ளி காந்தி ஆகியோர், விருதுடன், 6,000 ரூபாய் சன்மானம் பெறுவர். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை