23 ஆண்டுகளாக நடந்த வழக்கு: சந்தன வீரப்பன் கூட்டாளிகள் இருவர் விடுதலை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

23 ஆண்டுகளாக நடந்த வழக்கு: சந்தன வீரப்பன் கூட்டாளிகள் இருவர் விடுதலை

Added : செப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சத்தியமங்கலம்: நாட்டு துப்பாக்கி, யானை தந்தம் வைத்திருந்த வழக்கில், சந்தன கடத்தல் வீரப்பன் கூட்டாளிகள் இருவரை, சத்தியமங்கலம் நீதிமன்றம் விடுதலை செய்தது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த, தாளவாடி மலைப்பகுதியில், நாட்டு துப்பாக்கி, யானை தந்தம் வைத்திருந்ததாக, சந்தன கடத்தல் வீரப்பன் கூட்டாளிகளான கொளந்தபையன், 58, மாதையன், 61, முனுசாமி, 51, பெருமாள், 67 மற்றும் தவுரியா நாயக்கன், 67, ஆகியோரை தாளவாடி போலீசார், 1994ல் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு, சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த, 23 ஆண்டுகளாக நடந்த வழக்கில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கொளந்தபையன், தவுரியா நாயக்கன் இறந்து விட்டனர். ஏற்கனவே வழக்கில் இருந்து, மாதையன் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், மற்ற இருவரான முனுசாமி, பெருமாள் ஆகியோரை விடுதலை செய்து, குற்றவியல் நீதிமன்ற நடுவர் குமாரசிவம் உத்தரவிட்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை