ஈரோடு கலெக்டர் 'எங்கள் தங்கம்': அமைச்சர் கருப்பணன் பெருமிதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோடு கலெக்டர் 'எங்கள் தங்கம்': அமைச்சர் கருப்பணன் பெருமிதம்

Added : செப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோபி: ''எது சொன்னாலும், சரி என சொல்லும் கலெக்டர் தங்கம்,'' என, கோபியில் நடந்த அரசு விழாவில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் பேசினார்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே கொளப்பலூரில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின், புதிய அலுவலக கட்டட திறப்பு விழா நடந்தது. இதில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் பேசியதாவது: ஒரு லோடு மணல் வேண்டுமானால், 3,500 முதல், 4,000 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டும். ஆனால், இன்று நமக்கு எவ்வளவு வண்டல் மண் வேண்டுமானாலும், ஏரி மற்றும் குளங்களில் எடுத்து கொள்ளலாம். வறட்சியால், டிராக்டர் மற்றும் ஜே.சி.பி., வாகன உரிமையாளர்கள் வேலை வாய்ப்பை இழந்தனர். ஆனால், கடந்த ஆறு மாதங்களாக ஏரி மற்றும் குளங்களால், வாங்கிய கடனை வங்கியில் செலுத்துகின்றனர். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை, குடிமராமத்து பணிக்காக, தூர்வாராத குட்டையே இல்லை. நமது கலெக்டர் தங்கம் எனத்தான் சொல்ல வேண்டும். எது சொன்னாலும் சரி என, தெரிவித்து விடுகிறார். சட்டத்துக்கு அப்பாற்பட்டு கூட, நமக்கு அனுமதி வழங்கியுள்ளார். மொத்தம், 300க்கும் மேற்பட்ட ஏரி, குளங்களை தூர் வாரியுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை