காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

Added : செப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு: ஈரோட்டில் காவிரி ஆற்றில் குளித்த, சத்தியமங்கலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர், நீரில் மூழ்கி பலியானார். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், காந்திநகரை சேர்ந்தவர் வெங்கடேஸ். ரியல் எஸ்டேட் அதிபர். இவர் மகன் ரோகன் கணேஷ், 19; இவர், கோவையில் ஒரு கல்லூரியில், முதலாமாண்டு தகவல் தொழில் நுட்பவியல் படித்தார். ஈரோடு, கருங்கல்பாளையம் ராஜகோபால் தோட்டத்தில் உள்ள, நண்பர் அருணை பார்க்க, நேற்று முன்தினம் மாலை வந்தார். இரவு நண்பர்களுடன் தங்கினார். நண்பர்கள் நான்கு பேருடன் சேர்ந்து, கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் குளிக்க, நேற்று காலை சென்றார். நீச்சல் தெரியாத நிலையில், ஆழமான பகுதிக்கு சென்றபோது, நீரில் மூழ்கினார். அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், அங்கு குளித்து கொண்டிருந்த மற்றவர்களிடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் நீண்ட நேரம் தேடிய நிலையில், ரோகன் கணேஷ் உடல் சிக்கியது. புகாரின்படி, கருங்கல்பாளையம் போலீசார், விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை