குடிபோதை தகராறில் விபரீதம்: காதை கடித்தவர் தற்கொலை| Dinamalar

குடிபோதை தகராறில் விபரீதம்: காதை கடித்தவர் தற்கொலை

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மொடக்குறிச்சி: குடிபோதை தகராறில், தொழிலாளி காதை கடித்து துண்டாக்கிய, முதியவர் தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு மாவட்டம், அரச்சலூரை அடுத்த, பள்ளியூத்து அருகே, மேட்டூர் மந்தையை சேர்ந்தவர்கள், சின்னக்குட்டி, 45, அய்யாவு, 70; இருவரும் கூலித்தொழிலாளிகள். ஒரே பகுதியில் வசிப்பதால், வேலைக்கு சென்றுவிட்டு, மாலையில் மது அருந்துவது வழக்கம். நேற்று முன்தினம் மாலை இருவரும், மது அருந்தினர். போதை தலைக்கேறிய நிலையில், ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது சின்னக்குட்டியின் இடது காதை, அய்யாவு கடித்ததில் காது துண்டாகி, ரத்தம் சொட்டியது. ஈரோடு அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்கு சேர்ந்தார். அவர் புகாரின்படி, அரச்சலூர் போலீசார், அய்யாவை தேடிவந்தனர். இந்நிலையில், அவர் நேற்று மாலை, வீட்டில் 'சல்பாஸ்' மாத்திரை தின்று தற்கொலை செய்து கொண்டார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.