அண்ணாதுரை இல்லாமல் தமிழக அரசியல் இல்லை: தம்பிதுரை| Dinamalar

அண்ணாதுரை இல்லாமல் தமிழக அரசியல் இல்லை: தம்பிதுரை

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

கரூர்: ''அண்ணாதுரை இல்லாமல் தமிழக அரசியல் இல்லை,'' என, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை பேசினார்.
கரூரில், அண்ணாதுரை பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், நகர செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை பேசியதாவது: திராவிட கொள்கைகளுக்கு சட்ட வடிவம் கொடுக்க, தேர்தலில் பங்கேற்க வேண்டும் என, அண்ணாதுரை முடிவு செய்தார். கடந்த, 1967ல் தி.மு.க.,வை ஆட்சியில் அமர்த்தியவர் அண்ணாதுரை. சாதாரண தொண்டன் கூட எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர் ஆக முடியும் என்பதை துவக்கி வைத்தவர் அண்ணாதுரை. அவருக்கு பிறகு, எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் அதை பின்பற்றினர். அண்ணாதுரை இல்லாமல், தமிழக அரசியல் இல்லை. காமராஜர் முதல்வராக இருந்தபோது, அவரை மேடையில் வைத்துக்கொண்டு, குறைகளை அண்ணாதுரை சுட்டிக்காட்டினார். முதல்வர் பழனிசாமியை ஆட்சியை கலைத்துவிட்டு, முதல்வர் ஆகிவிடலாம் என, ஸ்டாலின் நினைக்கிறார். முதல்வர் பதவி என்ன, கரூர் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்திலா விற்கிறது? நீட் தேர்வைக் கொண்டு வந்தது, காங்., கட்சியும், தி.மு.க.,வும்தான். தற்போது, அதை மறைத்து விட்டு நாடகம் ஆடுகின்றனர். கச்சத்தீவு, காவிரி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கும் தி.மு.க., தான் காரணம். ஜி.எஸ்.டி.,யை எதிர்த்து வெளிநடப்பு செய்தது அ.தி.மு.க., ஆனால், தி.மு.க., அதை ஆதரித்து ஓட்டு போட்டது. இதுதான் தி.மு.க.,வின் இரட்டை வேடத்துக்கு எடுத்துகாட்டு. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.