அரசு சம்பளம் பெறும் ஆசிரியர்கள் வீடுகளில், 'டியூஷன்' எடுக்க தடை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு சம்பளம் பெறும் ஆசிரியர்கள் வீடுகளில், 'டியூஷன்' எடுக்க தடை

Added : செப் 17, 2017 | கருத்துகள் (43)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
அரசு சம்பளம் பெறும் ஆசிரியர்கள் வீடுகளில், 'டியூஷன்' எடுக்க தடை

அரசு சம்பளம் பெறும் பள்ளி ஆசிரியர்கள், 'டியூஷன்' எடுக்க, தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில், நான்கு லட்சத்துக்கும் மேற்பட்டஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.பெரும்பாலான ஆசிரியர்கள், அரசு சம்பளம் மற்றும் சலுகையை பெற்ற போதிலும், தங்கள் வீடுகளில், 'டியூஷன்' என்ற, தனிப் பயிற்சி வகுப்புகள் நடத்துகின்றனர். இதற்காக, மாணவர்களிடம் மாத கட்டணம் வசூலிக்கின்றனர்.


அரசு ஆசிரியர்கள் 'டியூஷன்' எடுக்க தடை

மாத சம்பளம்சில ஆசிரியர்கள், தனியார் நடத்தும், 'டியூஷன் சென்டர்'களில், காலை மற்றும் மாலைநேரங்களில், மாதசம்பளம் பெற்று பாடம்நடத்துகின்றனர்.அதனால், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு எடுக்கும் முதுநிலை ஆசிரியர்களும், 10ம் வகுப்பு எடுக்கும்பட்டதாரி ஆசிரியர்களும், தங்கள் வகுப்புகளில்,அரசு நிர்ணயித்தபடி, பாடங்கள் நடத்துவதில்லை என்ற, புகார் எழுந்துள்ளது.

தங்கள் வகுப்பு மாணவர்களை, டியூஷனுக்கு வரவழைத்து, அங்குகற்றுத் தருவதாக கூறப்படுகிறது.எனவே, அரசு மற்றும் அரசு உதவிபெறும்பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற, தங்கள் ஆசிரியர்களின்டியூஷன் வகுப்புக்குசெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.


எச்சரிக்கை

இதற்காக, மாதந்தோறும், 1,000 - 2,000 ரூபாய் வரை கட்டணம் தேவைப்படுவதால், பண வசதியின்றி அவதிப்படுகின்றனர்.இது குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகளுக்கு, சில பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, 'அரசு சம்பளம் பெறும் ஆசிரியர்கள்,டியூஷன் எடுக்கக் கூடாது' என, தடை விதிக்கப்பட்டு உள்ளது.'கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, டியூஷன் எடுக்க தடை உள்ளதால், ஆசிரியர்கள் விதிகளை பின்பற்ற வேண்டும்' என, மாவட்டக் கல்விஅதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

- நமது நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandran Sekar - chennai,இந்தியா
17-செப்-201719:51:22 IST Report Abuse
Chandran Sekar அருமையான சட்டம்
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா
17-செப்-201719:08:47 IST Report Abuse
அம்பி ஐயர் எல்லாம் திராவிடக் கட்சிகளால் வந்த “இன்பமயம்....”
Rate this:
Share this comment
Cancel
Vijay D.Ratnam - Chennai,இந்தியா
17-செப்-201719:07:49 IST Report Abuse
Vijay D.Ratnam பெரும்பாலான ஆசிரியர்கள், அரசு சம்பளம் மற்றும் சலுகையை பெற்ற போதிலும், தங்கள் வீடுகளில், டியூஷன் நடத்துவது என்பது பச்சை அயோக்கியத்தனம், இது ஒழிக்கப்படவேண்டிய ஒன்று. தன்னிடம் கண்டிப்பாக டியூஷன் படித்தால்தான் தேர்வடைய முடியும் என்று மறைமுகமாக மிரட்டும் ஆசிரியர்கள்தான் அதிகம். இதில் பெரும்பாலான அரசு பள்ளி ஆசிரியர்கள் கந்துவட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் கச்சிதமாக செய்கிறார்கள். அதேமாதிரி ஒரே குடும்பத்தில் கணவன் மனைவி என்று இரண்டு பேருக்கு அரசு வேலை என்பதும் ஒரு சமூக அநீதி. சமூக அயோக்கியத்தனம். இதுவும் அடியோடு ஒழிக்கப்படவேண்டும். கணவன் அல்லது மனைவி யாராவது ஒருவருக்கு மட்டுமே அரசு வேலை. மற்றவருக்கு கண்டிப்பாக அரசு வேலையை பறித்து வேறு ஒரு குடும்பத்துக்கு வழங்க வேண்டும். ஒரே குடும்பத்தில் இரண்டு அரசாங்க சம்பளம் என்பதற்கு பதில் இரண்டு குடும்பங்களுக்கு அரசாங்க சம்பளம் வழங்கலாம். அவசியம் வேலைக்கு போக்கவேண்டுமென்றால் தனியார் நிறுவனங்களில் பணியாற்றலாம்.
Rate this:
Share this comment
Joseph - Tirunelveli,இந்தியா
18-செப்-201700:28:31 IST Report Abuse
Josephசூப்பர் சார் இ லைக் இட் குட் குட் குட் குட்...
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
17-செப்-201718:31:00 IST Report Abuse
மலரின் மகள் மேலும் இவர்கள் சலுகைகள் போதாது என்று ஸ்ட்ரைக் வேறு செய்கிறார்கள். அரசு ஊழியர்கள் தனியாக வேறேதேனும் வேலை செய்கிறார்களா என்று கண்காணித்து கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசு ஆசிரியர்கள் ப்ராக்டிக்காலில் முழு மதிப்பெண் தரமாட்டார்கள் அவர்களிடம் டியூசன் படிக்கவில்லை என்றால். ஆகையால் அவர்களிடம் டியூசன் பணத்தை கட்டிவிட்டு, அதன் பிறகு தனியாக கல்லூரி ஆசிரியர்கள் வீட்டில் பாடம் படிக்கவேண்டும். ஒரு விதத்தில் அந்த ஐம்பது மார்க் செய்முறைக்கு அரசர் ஆசிரியர்கள் வாங்கும் லஞ்சம் தான் அந்த டியூசன் பணம். வேறு வழியின்றி தண்டம் அழைத்தான் வேண்டும். இனியும் திருந்துவார்களா என்றால் தெரியவில்லை. மேற்படி விதி ஏற்கனவே இருப்பது தான். அவர்கள் டியூசன் எடுக்கிறோம் என்ற சொல்கிறார்கள், மாணவர் மாணவிகளுக்கு பாடத்தில் சந்தேகம் அதை வீட்டில் வைத்து இலவசமாக சொல்லி தருகிறோம் என்று தான் சொல்லி டியூசன் எடுக்கிறார்கள். தலைமை ஆசிரியரே எடுக்கிறார் என்றால் என்ன சொல்வது.
Rate this:
Share this comment
Cancel
SaiBaba - Chennai,இந்தியா
17-செப்-201717:14:41 IST Report Abuse
SaiBaba நல்ல செய்தி.ஆனால் எப்படி கண்காணிப்பீர்கள். சின்ன குழந்தைகள் என்று ஈவு இரக்கமில்லாமல் நடத்தும் சமுதாயம் இது.வீட்டில் பாடம் எடுத்தே பிள்ளைகளை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டும் ஆசிரியர்கள் இருக்கிறார்களே.
Rate this:
Share this comment
Cancel
17-செப்-201715:17:14 IST Report Abuse
Thenaliraman super, இதை தான் எதிர்பார்த்தோம்.பல ஆசிரியர்கள் மாணவர்களை மிரட்டி டியுஷன் எடுப்பதாக அதாவது வந்தே ஆக. வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
K.Palanivelu - Toronto,கனடா
17-செப்-201715:00:10 IST Report Abuse
K.Palanivelu வேறு சில மாநிலங்களில் அரசு மருத்துவர்கள் தனியாக மருத்துவம் பார்க்கக்கூடாது என்ற தடையிருக்கிறது.அதையே இங்கு நடைமுறைக்கு கொண்டுவர இயலாத அரசாங்கம் ஆசிரியர்கள் தனியாக டியூஷன் தனியாக எடுக்கக்கூடாது என்ற யோசனையை எப்படி கண்காணித்து அமுல் படுத்த இயலும்? நமது அறிவு கொழுந்து ஆசிரியர்கள் 'டேக்கா' கொடுத்துவிடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Rajan. - singapore,சிங்கப்பூர்
17-செப்-201714:54:26 IST Report Abuse
Rajan. 75 % மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றால், இன்க்ரிமெண்ட் கட் என்று கொண்டுவரவேண்டும், அதேபோல் 100 % தேர்ச்சி பெற்றால் ஆசிரியர்க்கு கூடுதல் இன்க்ரிமெண்ட் கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
17-செப்-201714:41:43 IST Report Abuse
Barathan ஒரு ஆசிரியரின் பேச்சு: நான் என் என் மாணவன் வீட்டிலோ அல்லது எனது உறவினர் வீட்டுகளிலிலோ வச்சு டியூஷன் சொல்லி கொடுக்கபோறேனே?
Rate this:
Share this comment
Cancel
vinu - frankfurt,ஜெர்மனி
17-செப்-201713:57:46 IST Report Abuse
vinu அரசை நடத்தும் அரசியல்வாதிகளுக்கு, கார், பங்களா, மற்றும் தேவை இல்லாத அலவன்ஸ் களையும் நிப்பாட்டுங்கள். MP களுக்கு RS 15000/- டெலிபோன் அலவன்ஸ் எதற்கு. ஒரு மாதத்தில் அவர்களுக்கு Rs 3000/- டெலிபோன் அலவன்ஸ் கொடுக்கலாம். மிச்சம் உள்ளதை எல்லாம் CUT பண்ணுங்க. சாதாரண மக்களிடம் இருந்து வரியை பெற்று கொண்டு , நீங்கள் (மந்திரி/ MP / MLA / கள் சொகுசு வாழ்க்கையே வாழ்வதே தடை பண்ணுங்கள்).
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை