பணம் இரட்டிப்பு தருவதாக கூறி திருப்பூர் தொழிலதிபரிடம் ரூ.23 லட்சம் பறிப்பு| Dinamalar

பணம் இரட்டிப்பு தருவதாக கூறி திருப்பூர் தொழிலதிபரிடம் ரூ.23 லட்சம் பறிப்பு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, பணம் இரட்டிப்பு தருவதாக கூறி, திருப்பூரை சேர்ந்த தொழிலதிபரிடம், 23 லட்சம் ரூபாயை பறித்து சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பூர், வேலம்பாளையம் ரிங்ரோடு, ஜவகர் நகரை சேர்ந்தவர் சீனிவாசன், 40. இவர், திருப்பூரில் கார்மென்ட்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர்களான ரமேஷ், 35, குமார், 39, ஆகியோர் தங்களுக்கு தெரிந்த நபர்கள் கிருஷ்ணகிரியில் உள்ளனர். அவர்களிடம், 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தால், இரண்டு மாதங்கள் கழித்து, ஒரு லட்சம் ரூபாய் கொடுப்பர் என, சீனிவாசனிடம் தெரிவித்துள்னர். இதை நம்பிய சீனிவாசன், தன்னிடம் இருந்த, 23 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு, ரமேஷ், குமாருடன் கடந்த, 13ல் காரில் கிருஷ்ணகிரிக்கு வந்தார். கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், சிக்காரிமேடு என்ற இடத்தில், ஓட்டல் அருகே காரை நிறுத்தியுள்ளனர். அப்போது பதிவு எண் இல்லாத பொலிரோ ஜீப்பில் வந்த, ஐந்து பேர் சீனிவாசனிடம் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு, அங்கிருந்து காரில் தப்பிச் சென்றனர். காரை பின் தொடர்ந்தும், அவர்களை பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து, நேற்று முன்தினம் மாலை, குருபரப்பள்ளி போலீசில் சீனிவாசன் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, முதல் கட்டமாக ரமேஷ், குமாரிடம் விசாரித்து வருகின்றனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.