2018 மார்ச்சில் சந்திராயன் 2 விண்ணில் ஏவ முயற்சி: இஸ்ரோ துணை இயக்குனர் சர்மா பேட்டி| Dinamalar

2018 மார்ச்சில் சந்திராயன் 2 விண்ணில் ஏவ முயற்சி: இஸ்ரோ துணை இயக்குனர் சர்மா பேட்டி

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

ஓசூர்: ''சந்திராயன் 2 செயற்கைகோளை, 2018 மார்ச் மாதத்திற்குள் விண்ணில் ஏவ முயற்சி நடந்து வருகிறது,'' என, இஸ்ரோ துணை இயக்குனர் சர்மா கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள அத்வைத் இன்டர்நேஷனல் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியை, இஸ்ரோ துணை இயக்குனர் சர்மா பார்வையிட்டார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: சந்திராயன் 1 செயற்கைகோள் மூலம், நிலவில் நீர் உள்ளது கண்டறியப்பட்டது. இந்த பெருமை இந்தியாவை தான் சாரும். எந்த நாடும் செய்யாததை நாம் செய்துள்ளோம். வரும், 2018 மார்ச் மாதத்திற்குள், சந்திராயன் 2 செயற்கைகோளை, விண்ணில் செலுத்த முயற்சி செய்து வருகிறோம். 2017 பிப்ரவரி, 14 ல், ஐ.என்.எஸ்., 1 ஏ மற்றும் 1 பி ஆகிய, இரு சிறிய ரக செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தினோம். ஐ.என்.எஸ்., 1 சி செயற்கைகோள், டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்படும். பெரிய செயற்கைகோள்கள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு சிறிய ரக செயற்கை கோள்களும் முக்கியம். இந்தியாவில் விவசாயம், மின்சாரம், தொலைதொடர்பு உட்பட, 86 பயன்பாட்டிற்கு இஸ்ரோ உதவி செய்து வருகிறது. நாளுக்கு நாள் செயற்கை கோள்களின் தேவை அதிகரித்து வருகிறது. இஸ்ரோ மூலம் முதலில், நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது. அதன் பின், ஒரே ஆண்டில், இரு செயற்கைகோள்கள் ஏவப்பட்டன. கடந்த, மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும், பத்து செயற்கை கோள்களை அனுப்பி வருகிறோம். வரும், நான்கு ஆண்டுகளில், 75 செயற்கை கோள்கள் தேவைப்படுகிறது. வரும் ஆண்டுகளில் ஆண்டுதோறும், 15 முதல், 18 செயற்கைகோள் தேவை உள்ளது. செயற்கை கோள்களின் கழிவை சுத்தப்படுத்த, புதிய தொழில் நுட்பத்தை கையாள்வது குறித்து ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.