10ம் வகுப்பு பெயர் பட்டியல் தயாரிப்பு: பிறந்த தேதி சரி பார்க்க உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

10ம் வகுப்பு பெயர் பட்டியல் தயாரிப்பு: பிறந்த தேதி சரி பார்க்க உத்தரவு

Added : செப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, பிறந்த தேதியை சரி பார்த்து, உறுதிமொழி சான்றிதழ் சமர்ப்பிக்க, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச்சில் நடக்கிறது. நடப்பு கல்வியாண்டில், தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியல், தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. தேர்வு முடிந்த பின் வழங்கப்படும் மதிப்பெண் பட்டியல்களில், பிறந்த தேதியை தவறுதலாக குறிப்பிட்டுவிட்டு, பிழைதிருத்தும் விண்ணப்பம் வழங்குவது வாடிக்கையாகிவிட்டது. இதை தவிர்க்க, தற்போது பெயர் பட்டியல் தயாரிக்கும்போதே, மாணவர்களின் பிறப்பு சான்றிதழ் உடன் ஒப்பிட்டு பார்த்து, பிறந்த தேதியை பதிய உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி ஆவணங்களில், வேறு தேதி பதியப்பட்டிருப்பின், பிறப்பு சான்றிதழில் உள்ள தேதியை, உறுதிமொழி சான்றிதழில் பதிந்து, பள்ளி ஆவணங்களில் திருத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வர்களுக்கு, 2018 மார்ச், 1ல், 14 வயது நிறைவு செய்யாதபட்சத்தில், வயது தளர்வாணை கேட்டு, மாவட்ட கல்வி அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு, தலைமை ஆசிரியர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை