சேலத்தில் 2,560 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சேலத்தில் 2,560 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

Added : செப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: சேலம் மாவட்டத்தில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட, 2,560 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ சார்பில், செப்., 7 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. அதில், பங்கேற்றவர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்வதுடன், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதை மீறி, திரளான ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். இதனால், மருத்துவ விடுப்பு தவிர்த்து, வேலைநிறுத்தத்துக்கு விடுப்பு எடுத்த, அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளி ஆசிரியர்களில், 1,061 பேர், தொடக்க, நடுநிலை பள்ளி ஆசிரியர்களில், 1,499 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த, 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க, கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், அவர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை