விலையில்லா பஸ் பாஸ் வழங்குவதில் குழப்பம்: இரட்டை பதிவை தடுத்ததால் எண்ணிக்கை சரிவு| Dinamalar

விலையில்லா பஸ் பாஸ் வழங்குவதில் குழப்பம்: இரட்டை பதிவை தடுத்ததால் எண்ணிக்கை சரிவு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சேலம்: விலையில்லா பஸ் பாஸ் வழங்குவதில், இரட்டை பதிவு தடுக்கப்பட்டதால், எண்ணிக்கை குறைந்துள்ளதாக, தலைமை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் விலையில்லா பஸ் பாஸ் எண்ணிக்கையில், கடந்த கல்வியாண்டை விட, 41 ஆயிரம் குறைந்துள்ளதாக போக்குவரத்துக்கழகம் குற்றம்சாட்டியிருந்தது. இதுகுறித்து, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: கடந்த கல்வியாண்டில், 'ஸ்மார்ட் கார்டு' வழங்குவதில் பல்வேறு குளறுபடி இருந்தது. உதாரணமாக, பஸ் பாஸ் வழங்கப்பட்ட மாணவர்களுக்கே, மீண்டும் ஒருமுறை கார்டுகள் வழங்கப்பட்டன. இதன் அடிப்படையில், கடந்த ஆண்டு எண்ணிக்கை அதிகரித்தது. நடப்பு கல்வியாண்டில், 'எமிஸ்' எண் அடிப்படையில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இதனால், இரட்டை பதிவு முறை தடுக்கப்பட்டது. ஆனால், இன்னும் முழுமையாக மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்கப்படவில்லை. முழுமையாக வழங்கியபின், உண்மையான எண்ணிக்கை தெரியவரும். பூர்த்தி செய்து, சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் விடுபட்டுள்ளதா என்பது குறித்து சோதித்துக்கொள்ள, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.