ரூ.30 கோடி செலவில் 169 மொபைல்போன் டவர்கள்: பி.எஸ்.என்.எல்., முதன்மை பொது மேலாளர் தகவல் | Dinamalar

ரூ.30 கோடி செலவில் 169 மொபைல்போன் டவர்கள்: பி.எஸ்.என்.எல்., முதன்மை பொது மேலாளர் தகவல்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

வேலூர்: ''வேலூர் மண்டலத்தில், 30 கோடி ரூபாய் செலவில், புதிதாக, 169, 3 ஜி மொபைல் போன் டவர்கள் அமைக்கப்பட உள்ளன,'' என, வேலூர் மண்டல பி.எஸ்.என்.எல்., முதன்மை பொது மேலாளர் வெங்கட்ராமன் கூறினார்.
இதுகுறித்து அவர், நிருபர்களிடம் கூறியதாவது: பி.எஸ்.என்.எல்., திட்டங்களில் இருந்து வெளியேறிய வாடிக்கையாளர்கள், மீண்டும் இணைப்பு பெற, லேண்ட் லைனுக்கு, 49 ரூபாய், பிராட் பேண்ட்டுக்கு, 249 ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இணைப்பு பெறும் வாடிக்கையாளர்களின் முதல் மாதம் தொகையை, பி.எஸ்.என்.எல்., நிறுவனமே செலுத்தும். இதன்படி, 1,824 பேர் மீண்டும் இணைப்பு பெற்றுள்ளனர். மொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கு, 429 ரீ சார்ஜ் செய்தால், தினமும் ஒரு ஜிபி., இன்டர்நெட்டுடன், அன்லிமிடெட் அழைப்புகள், 90 நாட்கள் பெறலாம். 666 ரூபாய் ரீ சார்ஜ் செய்து, தினமும் இரண்டு ஜிபி இன்டர்நெட்டுடன், அன்லிமிடட் அழைப்புகளை, 90 நாட்கள் பெறலாம். வேலூர் மண்டலத்தில், ஒரு லட்சம் பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதில், 50 ஆயிரம் பேர் தங்கள் ஆதார் எண்ணை, சிம்கார்டில் இணைத்துள்ளனர். பிப்., 9க்குள் இணைக்காதவர்களின் சிம் கார்டு ரத்து செய்யப்படும். இதற்கான சிறப்பு முகாம், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூரில் இன்று நடக்கிறது. வேலூர் மண்டலத்தில், 453, 2ஜி டவர்கள், 195, 3 ஜி டவர்கள் உள்ளன. புதிதாக, 30 கோடி ரூபாய் செலவில், 169 இடங்களில், 3 ஜி டவர்கள் அமைக்கப்படும். நான்கு கோடி ரூபாய் செலவில், லத்தேரி, அம்மூர், கணியம்பாடி, கொணவட்டம் ஆகிய தொலைபேசி மையங்கள் உயர் தொழில் நுட்ப முறையிலும், ஒன்பது தொலைபேசி மையங்கள் டேடா வசதிக்கும் மாற்றப்பட்டுள்ளன. பி..எஸ்.என்.எல்., தொலைபேசி மையங்களில், வங்கிகள் சார்பில் ஏ.டி.எம்., மையங்கள் அமைத்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.